ரோபோ சங்கர் நினைவிலிருந்து மீளாத மகள்.. மகன் பிறந்தநாளுக்கு இந்திரஜா கலங்கிட்டாங்க

சென்னை: நடிகர் ரோபோ சங்கர் கடந்த வருடத்தில் உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த திரைத்திறையினரிடமும், ரசிகர்களிடமும் பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. முழுவதுமாக தீய பழக்கங்களில் இருந்து வெளியேறிவிட்ட பிறகு அவருக்கு நேர்ந்த இந்த மரணம் அதிர்ச்சியைத்தான் கொடுத்தது. இந்நிலையில் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று நெகிழ செய்திருக்கிறது.

மதுரையை சேர்ந்த ரோபோ சங்கர் ஏகப்பட்ட திறமைகளை தன்வசம் கொண்டிருந்தவர். மிமிக்ரி, டைமிங் காமெடி, நடனம், பாடி பில்டிங் என அத்தனை ஏரியாக்களிலும் தன்னை நிரூபித்தவர். சின்னத்திரையில் ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருந்த அவரை; நடிகர் தனுஷ் தான் ஹீரோவாக நடித்த மாரி படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அழைத்துவந்தார். முதல் படத்திலேயே தான் ஏற்றிருந்த கதாபாத்திரத்தை மிகச்சிறப்பாக டெலிவர் செய்து ரசிகர்களிடம் அப்ளாஸை அள்ளினார்.

பிஸியான நடிகர்: மாரி படத்தில் அவருக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து வாய்ப்புகள் அதிகளவில் கிடைத்தான். அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் பிஸியான நடிகராக மாறினார். ஒவ்வொரு படத்திலும் தன்னால் முடிந்த அளவு வித்தியாசமான நடிப்பை வழங்கினார். அதையெல்லாம் கவனித்த பலரும் கண்டிப்பாக திரைத்துறையில் ரோபோவுக்கு பெரிய இடம் காத்திருக்கிறது என ஆரூடம் கூறினார்கள். அதன்படிதான் அவரது திரை பயணமும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Robo Shankar s Daughter Indraja Shares Emotional Instagram Video Remembering the Late Actor
Photo Credit:

உடல்நல குறைவு: கரியர் பீக்கில் இருந்தபோது அவருக்கு மது பழக்கும் ஒட்டிக்கொண்டது. ஒருகட்டத்தில் அந்தப் பழக்கத்துக்கு அடிமையும் ஆகிவிட்டார். இதன் காரணமாக உடல்நல குறைவு ஏற்பட்டது. இனிமேல் அவரால் பிழைக்க முடியாது என சத்தியமே செய்தார்கள் ஒருதரப்பினர். எப்படியோ அவரை சிகிச்சையில் அனுமதித்து நல்லபடியாக மீட்டு கொண்டு வந்தார்கள் குடும்பத்தினர். கிட்டத்தட்ட இரண்டாவது ஜென்மம் எடுத்தது மாதிரிதான் அது. முழுவதுமாக கெட்ட பழக்கங்களை கைவிட்டு கரியரில் கவனம் செலுத்தினார்.

உயிரிழந்த ரோபோ சங்கர்: இதற்கிடையே தனது மகள் இந்திரஜாவுக்கு கோலாகலமாக திருமணத்தையும் செய்துவைத்தார். கார்த்திக் என்பவரை திருமணம் செய்த ரோபோவின் மகள் ஒரு மகனையும் பெற்றெடுத்தார். சூழல் இப்படி இருக்க கடந்த வருடத்தில் ஒரு படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டபோது திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தார் ரோபோ. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும்; நீண்ட நேர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இந்திரஜா பதிவு: அவரது உயிரிழப்பு அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது. அனைத்து பழக்கங்களிலிருந்தும் வெளியே வந்த பிறகும் அவர் உயிரிழந்தது அதிர்ச்சியையும் கொடுத்தது. இந்நிலையில் இந்திரஜாவின் மகனுக்கு பிறந்தநாள் இன்னும் சில நாட்களில் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி அவர் ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கிறார். அதாவது ரோபோ சங்கர் உயிரோடு இருந்தபோது தனது பேரனுக்கு அன்போடு உணவு ஊட்டிவிடும் காட்சிகள் அந்த வீடியோவில் இருக்கின்றன. இது பார்ப்போரை கலங்க வைத்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X