ரோபோ சங்கர் ஒல்லியாக இதுதான் காரணமா..? மனைவியே இப்படி ஓப்பனாக சொல்லிட்டாங்களே!
சென்னை: விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்கள் மூலம் பிரபலமானவர் ரோபோ சங்கர்.
அஜித், விஷால், சிவகார்த்திகேயன், விக்ரம், விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் உடல் மிகவும் மெலிந்த நிலையில் ரோபோ ஷங்கரின் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலானது.
இதுகுறித்து பல்வேறு விதமான செய்திகள் வெளியான சூழலில், ரோபோ ஷங்கரின் மனைவி விளக்கம் கொடுத்துள்ளார்.

ரோபோ சங்கரின் வைரல் போட்டோ
ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக திரையுலகில் அறிமுகமான ரோபோ சங்கர், விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு, ஜோடி நம்பர் 1 போன்ற ரியாலிட்டி ஷோக்கள் மூலம் பிரபலமானார். ரோபோ சங்கரின் மிமிக்ரி, காமெடிகளுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்ததால், சினிமாவில் தடம் பதித்தார். அஜித், விக்ரம், விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற டாப் ஹீரோக்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் ரோபோ ஷங்கரின் போட்டோ ஒன்று வைரலானது.

ரோபோ சங்கர் மனைவி விளக்கம்
விஜய் டிவி, சினிமா ப்ரோமோஷன் ஈவண்ட்ஸ் என எப்போதும் பிஸியாக இருப்பதே ரோபோ சங்கரின் வழக்கம். ஆனால், அந்த போட்டோவில் உடல் எடை ரொம்பவே குறைந்து மிகவும் ஒல்லியாக காணப்பட்டார். இயல்பாகவே நல்ல வெயிட்டாக இருக்கும் ரோபோ சங்கர், திடீரென உடல் மெலிந்து பார்க்கவே பரிதாபமாக இருந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால், ரோபோ சங்கருக்கு உடல்நிலை சரியில்லை என செய்திகள் வெளியாகி வந்த நிலையில், அவரது மனைவி தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.

எல்லாம் அதுக்காக மட்டும் தான்
இதுகுறித்து சமீபத்தில் கொடுத்த பேட்டியில் பேசியுள்ள ரோபோ ஷங்கரின் மனைவி பிரியங்கா, தனது கணவர் பற்றி நிறைய வதந்திகள் வருகின்றன. அவருக்கு எந்த நோயும் இல்லை, தற்போது நடித்துவரும் படத்திற்காக தான் உடல் எடையை குறைத்துள்ளதாக கூறியுள்ளார். முன்னதாக ரோபோ ஷங்கர் அளவுக்கதிகமாக மது அருந்திவிட்டார், சர்க்கரை நோய் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகி வந்தன. அவை எல்லாவற்றுக்கும் ரோபோ சங்கரின் மனைவி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ரசிகர்கள் நிம்மதி
ரோபோ சங்கரின் போட்டோவை பார்த்து அதிர்ச்சியில் இருந்த அவரது ரசிகர்கள் இப்போது நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் அனுமதியில்லாமல் கிளி வளர்த்த விவகாரம் வைரலானது. அதற்காக அவருக்கு ரூ. 5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவும் சினிமாவில் காமெடி வேடங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. விஜய்யின் பிகில், கார்த்தியின் விருமன் உள்ளிட்ட மேலும் சில படங்களில் நடித்து பிரபலமானவர்.

படப்பிடிப்பில் தீவிரம்
உடல் எடையை குறைத்துள்ள ரோபோ ஷங்கர், அடுத்தடுத்து மேலும் சில படங்களில் கமிட் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இன்னும் சில மாதங்களுக்கு படப்பிடிப்பில் தீவிரமாக பணியாற்ற உள்ளாராம். மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டாக சின்ன திரையில் கலக்கிய ரோபோ சங்கர், தனுஷுடன் மாரி, அஜித்தின் விஸ்வாசம், சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன், மிஸ்டர் லோக்கல், ஹீரோ, விஷாலுடன் இரும்பு திரை, விக்ரமுடன் கோப்ரா திரைப்படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











