Robo Shankar - தனுஷ் அதை இப்போ டோட்டலா நிறுத்திட்டார்.. போட்டுடைத்த ரோபோ ஷங்கர்

சென்னை: Robo Shankar (ரோபோ ஷங்கர்) தனுஷ் ஒரு விஷயத்தை மொத்தமாக நிறுத்திவிட்டார் என நடிகர் ரோபோ ஷங்கர் தெரிவித்திருக்கிறார்.

ரோபோ ஷங்கர் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர். ரஜினி, அஜித்,தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். மேலும் பல படங்களில் நடிப்பதற்கும் அவர் கமிட்டாகியிருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சமீப காலமாக ஓய்வில் இருந்தார். இதன் காரணமாக கோலிவுட்டில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. மேலும் ரோபோ ஷங்கருக்கு என்ன ஆயிற்று எனவும் பலர் கேள்வி எழுப்பினர்.

Robo Shankar Shares a secret about Dhanush

மஞ்சள் காமாலை: ரோபோ ஷங்கருக்கு குடிப்பழக்கம் அதிகம் இருந்ததாகவும் அதனால்தான் அவரது உடல் உருக்குலைந்துவிட்டதாகவும் சர்ச்சைக்குரிய பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே ஷங்கரின் நெருங்கிய நண்பரான நடிகர் போஸ் வெங்கட் ரோபோ ஷங்கருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் ஓய்வில் இருக்கிறார் விரைவில் மீண்டுவிடுவார் என தெரிவித்தார். இந்தச் சூழலில் தனக்கு மஞ்சள் காமாலை வந்ததாக ரோபோவே ஒத்துக்கொண்டார்.

ஏன் மஞ்சள் காமாலை?: தனக்கு மஞ்சள் காமாலை வந்துவிட்டதாக ரோபோ ஷங்கர் ஒத்துக்கொண்டதை அடுத்து குடியால்தான் வந்தது என பலரும் பலமாகவே பேச ஆரம்பித்தனர். ஆனால், இது எல்லோருக்கும் வரும் நோய்தான். எனக்கு இந்த நோய் சிறு வயதில் ஏற்கனவே ஒருமுறை வந்திருக்கிறது. இந்த நோய் எனக்கு மீண்டும் வந்ததன் மூலம் நான் முடிந்துவிட்டதாகவே பலரும் நினைத்தனர் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் உருக்கத்துடன் தெரிவித்திருந்தார்.

Robo Shankar Shares a secret about Dhanush

ரோபோ ஷங்கர் பேட்டி: இந்நிலையில் ரோபோ ஷங்கர் அளித்த பேட்டி ஒன்றில் தனுஷ் குறித்து பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "தனுஷ் எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. வாழ்க்கை கொடுத்தார். அப்படித்தான் நான் சொல்வேன். மாரி ஷூட்டிங் ஸ்பாட்டில் பல விஷயங்களை நான் சேர்த்தேன். முக்கியமாக படத்தில் அவர் போட்டிருக்கும் கண்ணாடியை நான் தேர்வு செய்தேன்.

அதை நிறுத்திவிட்டார்: என்னிடம் முன்னாடி ஒரு பழக்கம் இருந்தது. அது என்னவென்றால் நான் நிறைய சரக்கு அடிப்பேன். ஆனால் தனுஷ் அதை மொத்தமாகவே நிறுத்திவிட்டார். எல்லோரும் ரிலாக்ஸுக்காக பார்ட்டி போன்ற சமயங்களில் குடிப்பார்கள். ஆனால் தனுஷ் அதையும் நிறுத்திவிட்டார். என்னையும் நிறுத்திவிட அறிவுறுத்தவும் செய்தார். அவர் சுத்த சைவம். ஒருமுறை எனது திருமண நாளுக்கு நாங்கள் வீட்டிலிருந்து செய்து கொண்டு போன சாப்பாட்டை எங்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X