Ajithkumar: ரோபோ சங்கரைத் தட்டிக் கொடுத்த அஜித்குமார்.. பேசிக்கொண்ட செய்த விஷயம்தான் வேற லெவல்!

சென்னை: நடிகர் அஜித்குமார் படம் இந்த ஆண்டு ரிலீஸ் ஆகவில்லை என்றாலும் அவர் குறித்த பேச்சுக்களும் வீடியோக்களும் தமிழ் சினிமா உலகில் இந்த ஆண்டு டாப்பில்தான் இருந்துள்ளது. அடுத்த ஆண்டு இரண்டு படங்கள் ரிலீஸ், அதையடுத்து, ஐரோப்பா கார் பந்தயம் என அஜித் அடுத்த ஆண்டும் ஹாட் ஆஃப் த டாப்பிக்கில் ஆண்டு முழுவதும் இருக்கப்போகின்றார். இப்படியான நிலையில் நடிகர் அஜித்தை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நடிகர் ரோபோ சங்கர் சந்தித்துள்ளார். அப்போது அவர் எடுத்துக்கொண்ட வீடியோவைப் பகிர்ந்துள்ளார். மேலும் அப்போது இருவரும் என்ன பேசிக்கொண்டார்கள் எனவும் ரோபோ சங்கர் தெரிவித்துள்ளார்.

robo shankar ajithkumar

நடிகர் அஜித், தமிழ் சினிமாவிலேயே கொஞ்சம் வித்தியாசமான நடிகர் மற்றும் எதார்த்தவாதியாகவும் இருந்துள்ளார். தான் சினிமாவில் காலடி எடுத்துவைத்து, ஓரளவுக்கு வளர்ந்த காலகட்டத்தில் அஜித்தின் நடவடிக்கைகள், சினிமாத்துறைக்குள் இருந்தவர்களை பல இடங்களில் ஆச்சரியப்பட வைத்துள்ளது. சில இடங்களில் முகம் சுழிக்க வைத்துள்ளது. அந்த அளவுக்கு இருந்த அஜித் ஒரு கட்டத்திற்கு மேல், நிதானமாக இருக்க ஆரம்பித்துவிட்டார். ரசிகர் மன்றங்களைக் கலைத்தார். தன்னை அஜித் என்றே அழைக்க வேண்டும் என ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

robo shankar ajithkumar

தனது படங்களின் புரோமோசனில்கூட அஜித் கலந்து கொள்வதில்லை. எனது வேலை தயாரிப்பாளருக்கு படத்தில் நடித்துக் கொடுப்பதுதான். படத்தை வியாபாரம் செய்து கொடுப்பதில்லை என தீர்க்கமாக இருக்கின்றார். சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், தனது பி.எம். டபள்யூ பைக்கை எடுத்துக் கொண்டு நாடு நாடாக சுற்றுவது, குடும்பங்களுடன் நேரம் செல்விடுவது என அஜித் ரூட்டே தனிதான்.

robo shankar ajithkumar

2025: இப்படியான நிலையில் இன்னும் 10 தினங்களில் அவரது நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகின்றது. அதன் பின்னர் சில மாதங்களுக்குப் பிறகு, குட் பேட் அக்லி படம் ரிலீஸ் ஆகின்றது. அடுத்த வருடம் முழுவதும் ஐரோப்பிய கார் பந்தயத்தில்தான் கவனம் செலுத்தவுள்ள அஜித், ஒரு ஆண்டுக்கு சினிமாவுக்கு குட் பை சொல்லிவிட்டார்.

robo shankar ajithkumar

ரோபோ சங்கர்: இப்படியான நிலையில், சென்னை இருந்து, துபாய்க்கு செல்ல வந்திருந்த அஜித்குமாரை நடிகர் ரோபோ சங்கர் சந்தித்துள்ளார். ரோபோ சங்கரை பார்த்ததும் மகிழ்ச்சியில் நடிகர் அஜித், அவரிடம் நலம் விசாரித்துள்ளார். மேலும் குடும்பத்தினர் குறித்தும் நலம் விசாரித்துள்ளார் அஜித். தான் எடுத்துக் கொண்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ரோபோ சங்கர், இருவரும் என்ன பேசிக்கொண்டோம் என்பது குறித்தும் பதிவிட்டுள்ளார்.

robo shankar ajithkumar

பேசியது: அதாவது, " நீண்ட நாட்களுக்கு பிறகு விஸ்வாசத்தின் சுவாசத்தை சுவாசித்தேன்.அன்புடன் நலம் விசாரித்தார். புது வருடத்தின் ஆரம்பம் AK உடன் சென்னை விமானநிலையத்தில் எதிர்பாரா சந்திப்பு. Happy new year to all" என பதிவிட்டுள்ளார். ரோபோ சங்கரின் இந்த வீடியோ பதிவு அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அஜித்தும் ரோபோ சங்கரும் சிவா இயக்கத்தில் வெளியான விஸ்வாசம் படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

robo shankar ajithkumar

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X