ஓவியாவிடம் போராடி மருத்துவ முத்தம் வாங்கினேன்.. புகழந்து தள்ளிய ரோபோ சங்கர்!
சென்னை: ஓவியாவிடம் போராடி மருத்துவ முத்தம் பெற்றதாக நடிகர் ரோபோ சங்கர் தெரிவித்துள்ளார்.
விமல் மற்றும் ஓவியா நடிப்பில் வரும் ஜூலை 5 ம் தேதி வெளியாக இருக்கும் களவாணி 2 திரைப்படத்தை இயக்குனர் சற்குணம் இயக்கி, தயாரித்துள்ளார்.
இந்நிலையில் படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். இதில் நடிகை ஓவியா, சரண்யா பொன்வண்ணன், இளவரசன், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விமலுக்கு 25வது படம்
நிகழ்ச்சியில் பேசிய ரோபோ ஷங்கர், முதல் படத்திலேயே ஓவியா ரசிகர்களை கட்டிப்போட்டுவிட்டதாக கூறினார். விமலை மாப்பிள்ளை என்ற அவர் விமலுக்கு இது 25வது படம் என்றார்.

மொக்கை செய்த ஓவியா
விருது விழா ஒன்றில் தானும் சதீஷும் போராடி மருத்துவ முத்தம் பெற்றதாக கூறினார். ஆனால் அதற்கு பதிலளித்த ரோபோ ஷங்கர், எவ்ளோ பேருக்கு கொடுத்திருக்கிறேன் என கூறி மொக்கை செய்துவிட்டார் ஓவியா.

தஞ்சை ஓவியா ஆர்மி
மேலும் களவானி 2ல் நடித்துள்ள சுதாகரை பற்றி புகழ்ந்த ரோபோ ஷங்கர், ஓவியாவின் தீவிர ரசிகர் என்றும் தஞ்சை ஓவியா ஆர்மி என்ற ஆர்மியை வைத்துள்ளார் என்று கூறினார்.

படக்குழுவுக்கு பாராட்டு
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தான் இப்படிதான் என தனது கேரக்டரை அப்படியே வெளிப்படுத்தி உலகம் முழுவதும் பிரபலமானவர் ஓவியா என்றும் ரோபோ ஷங்கர் புகழ்ந்து தள்ளினார். இதேபோல் சரண்யா பொன்வண்ணன் மற்றும் இளவரசன் ஆகியோரை புகழ்ந்த ரோபோஷங்கர் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











