ரோபோ சங்கர் மகள் திருமணத்துக்கு நயன்தாரா வந்தாரா?.. அறந்தாங்கி நிஷாவை இன்னாம்மா கலாய்க்கிறாரு!

சென்னை: சின்னத்திரை நயன்தாரா என அழைத்தால் தான் அறந்தாங்கி நிஷா வருவாரு என ரோபோ சங்கர் கலாய்க்க, நயன்தாரான்னு சொன்னால் தான் வருவேன் என நிஷா சொல்லி விட்டார்.

விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ரோபோ சங்கர். சந்தானம், சிவகார்த்திகேயனை தொடர்ந்து விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்குப் போய் காமெடி நடிகராக கலக்கியவர் ரோபோ சங்கர்.

Robo Shankar teases Bigg Boss fame Aranthangi Nisha at Indraja Shankar wedding reception

ரோபோ சங்கர் மகளின் திருமணம் சற்றுமுன் கோலாகலமாக மதுரையில் நடைபெற்றது. சினிமா பிரபலங்கள், விஜய் டிவி பிரபலங்கள் உள்ளிட்ட பலர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளனர். பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனல் அதிகாரப்பூர்வமாக இந்திரஜா திருமணத்தை கவர் செய்து வருகிறது.

ரோபோ சங்கர் மகள் திருமணம்: அப்பாவைப் போல சினிமாவில் வாரிசு நடிகையாக அறிமுகமான இந்திரஜா சங்கர் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்த நிலையில் தனது தாய்மாமனை திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்திரஜா சங்கரின் திருமணம் இன்று மதுரையில் தடபுடலாக நடைபெற்று வருகிறது.

திருமண வரவேற்பு விழா: இன்று காலை திருமணம் நடைபெற்ற நிலையில், நேற்று இரவு திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. அதில் நடிகர் சூரி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர். சின்னத்திரை நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான அறந்தாங்கி நிஷா நேற்று நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்றார்.

சின்னத்திரை நயன்தாரா: கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்த அறந்தாங்கி நிஷாவை சின்னத்திரை நயன்தாரா என்று விஜய் டிவியில் பலரும் கிண்டலாக அழைத்து வருகின்றனர். சின்னத்திரை நயன்தாரா என அழைத்தால் தான் நிஷா வருவார் என ரோபோ சங்கர் பேச, நயன்தாரா வைத்தால் தான் வருவேன் என்றதும் "ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா.. நயன்தாரா" பாடலை இசைத்து அறந்தாங்கி நிஷாவை திருமண மேடைக்கு ரோபோ சங்கர் அழைத்தார்.

வயசான பாட்டிக்கு: சந்தோசமாக மேடையேறி ரோபோ சங்கர் மனைவியை கட்டிப்பிடித்து ஹேப்பியாக இருந்த நிஷாவை பார்த்து, ரொம்ப பீத்திக்காத, வயசான பாட்டி கிட்ட தான் இப்போ இந்த பாட்டை போடுறாங்க என பங்கமாக கலாய்த்து உள்ளார்.

மண மக்களுக்கு வாழ்த்து: காமெடியாக ரோபோ சங்கர் மற்றும் அறந்தாங்கி நிஷா ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொண்ட பின்னர், மணமக்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அக்கா சாப்பிட்டுத்தான் போகணும் என இந்திரஜா அக்கறையுடன் பேசி அவரை வழியனுப்பினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X