இனிமே நீ ’ரோபோ சிங்கர்’ என அழைக்கப்படுவாய்.. ஆட்டோ ஆந்தமை என்னம்மா பாடி இருக்காருன்னு பாருங்க!

சென்னை: காமெடியனாக கலக்கி வரும் நடிகர் ரோபோ சங்கர், கன்னி மாடம் படத்திற்காக பாடகர் அவதாரம் எடுத்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சிவாஜி உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக மிரட்டிய போஸ் வெங்கட் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

ஸ்ரீராம் கார்த்திக், சாயா தேவி, ஆடுகளம் முருகதாஸ், மைம் கோபி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வர காத்திருக்கிறது.

கலக்கப் போவது யாரு

கலக்கப் போவது யாரு

விஜய் டிவியில் வெளியான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ரோபோ சங்கர், படிப்படியாக சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு காமெடியனாக அப்கிரேட் ஆனவர். சிவகார்த்திகேயன், தனுஷ், சிம்பு, அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் காமெடியில் கலக்கி உள்ளார்.

அன்னைக்கு காலைல 6 மணிக்கு

அன்னைக்கு காலைல 6 மணிக்கு

தனுஷின் மாரி படத்தில் சனிக்கிழமை கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய ரோபோ சங்கர், நடிப்பில் ஆல் டைம் ஃபேவரைட் காமெடி படம் என்றால், அது விஷ்ணு விஷாலின் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படம் தான். அந்த படத்தில் அன்னைக்கு காலைல 6 மணிக்கு என தொடர்ந்து பேசி பலரை டயர்டாக்கி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பார்.

பாடகர் அவதாரம்

வெங்கட் போஸ் இயக்குநராக அறிமுகமாகவுள்ள கன்னி மாடம் படத்தில் வரும் "மூணு காலு வாகனம்" என்ற ஆட்டோ ஆந்தமை அசத்தலாக பாடி பாடகர் அவதாரத்தையும் ரோபோ சங்கர் எடுத்துள்ளார். ஹரி சாய் இசையில், விவேகா எழுதியுள்ள பாடல் வரிகள் அடுத்த "நா ஆட்டோக்காரன்" பாடலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்டோ ஆந்தம் ஏன்?

ஆட்டோ ஆந்தம் ஏன்?

மெட்டி ஒலி உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமான போஸ் வெங்கட், வெள்ளித்திரையில் பல படங்களில் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்து மிரட்டியுள்ளார். சினிமாவுக்கு வருவதற்கு முன்னதாக ஆட்டோ டிரைவராக பணி புரிந்த போஸ் வெங்கட், தனது பழைய நினைவுகளை நினைத்து பார்க்கும் விதமாக ஆட்டோ ஆந்தமை இந்த படத்தில் வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X