ரஜினியைப் புகழும் ரோபோ… ரியல் ரோபோ!
Recommended Video

சென்னை: நடிகர் ரோபோ சங்கர் ரஜினிகாந்தின் புகழ்பாடும் போட்டோவை பகிர்ந்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமாகி சினிமாவுக்கு வந்தவர் நடிகர் ரோபோ சங்கர். தற்போது அஜித்தின் விஸ்வாசம் உள்பட பல படங்களில் நடித்து வருகிறார்.

ரோபோ சங்கர் ஒரு தீவிர கமல் ரசிகர். கமல்ஹாசனின் பிறந்தநாள் மற்றும் படம் ரிலீசாகும்போது சொந்த செலவில் போஸ்டர் அடித்து ஒட்டி அசத்துவார்.
இப்போது ரஜினிகாந்தை புகழ்ந்து ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார். பறையடிக்கும் ஒருவருடன் ரஜினி நிற்பது, ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினிகாந்த் ரசிகளை சந்தித்தபோது எடுத்த போட்டோவையும் பகிர்ந்துள்ளார்.
கூச்சப்பட்டு விலகி நிற்பவர்களைக் கூட தன்னுடன் சேர்த்து அரவணைத்து நிற்க வைப்பதை ரஜினியிடம் நிறைய பார்க்கலாம். பாகுபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. எல்லோரையும் சரிசமமாக நேசிக்கும் மனிதன் ரஜினி என பதிவிட்டுள்ளார்.
மேலும் அதனால் தான் இவரின் எளிமையை யாருடனும் ஒப்பிடவே முடியாது எனக் கூறி எனக்குப் பிடித்த ரஜினி என ஹேஷ்டேக் இட்டுள்ளார். எனக்குப் பிடித்த ரஜினி என ட்ரெண்டாகும் இந்த ஹேஷ்டேக்கில் ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் ட்விட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











