ரோபோ சங்கர் காற்றில் கரைந்தார்.. கணவரின் இறுதி ஊர்வலத்தில் ஆடிய பிரியங்கா.. கதறி அழுத மகள்!

சென்னை: மதுரையை சேர்ந்த ரோபோ சங்கர், விஜய் டிவியில், கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார்.
தனது வித்தியாசமான நகைச்சுவையால் அனைவரையும் கவர்ந்த அவர், பின்பு பல காமெடி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்டு புகழ் பெற்ற ரோபோ சங்கர் நேற்று உயிரிழந்த நிலையில், அவரின் உடல் வளசரவாக்கத்தில் உள்ள மின் மயமானத்தில் தகனம் செய்யப்பட்டது.

மேடையில் பாடிபில்டராக இருந்து தனது பயணத்தை தொடங்கிய ரோபோ சங்கர் தனது கடுமையாக உழைப்பாலும், அசாத்தியமான திறமையாலும் ரசிகர்கள் மனதில் தனக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டத்தை வைத்து இருந்தார். சின்னத்திரையில் கலக்கிய ரோபோ சங்கர், சினிமாவிலும் வாய்ப்பு பெற்று அஜித், தனுஷ், சூர்யா,விஷ்ணுவிஷால் என பல முன்னணி நடிகர்களில் படத்தில் நடித்துள்ளார். குறிப்பாக வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் எம்ல்ஏ ஜாக்கெட் என்கிற ரோலில் நடித்து தனது திறமையை நிரூபித்தார். மேலும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றினார்.

Robo Shankar Funeral

நகைச்சுவை நடிகர்: நடிகர் ரோபோ சங்கருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டார். அந்த நேரத்தில் ரோபோ சங்கர் இனிமேல் அவ்வளவு தான், அவர் கதை முடிந்தது என பலவிதமான கருத்துக்கள் பரவின. ஆனால், குடியை நிறுத்திவிட்டு அதில் இருந்து மீண்டு வந்த ரோபோ சங்கர், தனது ஒரு மகள் இந்திரஜாவின் திருமணத்தை நடத்தினார். நாளை மறுநாள் பேரனுக்கு காதுகுத்து விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில் நேற்றிரவு உயிரிழந்தார்.

உயிர் பிரிந்தது: கடந்த செவ்வாய்க்கிழமை, 'காட்ஸ்ஜில்லா' படத்தின் பூஜையில் கலந்து கொண்டு படப்பிடிப்பில் நடித்துக்கொண்டு இருந்த போது, திடீரென ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவமனையின் தகவலின்படி, அவரது இரைப்பை மற்றும் குடலில் ஏற்பட்ட ரத்தக் கசிவும், பல உடல் உறுப்புகள் செயலிழந்ததும் காரணமாக அவரின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்த நிலையில், நேற்றிரவு உயிரிழந்தார். அவரின் உடல் வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது இதில் நடிகர்கள்,நடிகைகள், அரசியல் பிரமுகர்கள் உறவினர்கள் என அனைவரும் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

காற்றில் காற்றில் கரைந்தார்: இதையடுத்து, ரோபோ சங்கரின் உடல் அவரின் இல்லத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. வழிஎங்கும் திரண்டு இருந்த மக்கள் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இறுதி ஊர்வலத்தில் ரோபோ சங்கரின் மனைவி பிரிங்கா கண்ணீருடன் நடனமாடினார். அவரின் உடல் வளவசரவாக்கத்தில் உள்ள மின்மயானத்தில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டன. ரோபோ சங்கரின் மருமகன் கார்த்திக், தனது மாமனாருக்கு ஈமச்சடங்குகளை செய்தார். இதையடுத்து சற்று முன் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது. தன்னுடைய தனித்துவமான திறமையால் மக்கள் மனதில் இடம் பிடித்த ரோபோ சங்கர் மறைந்தாலும் என்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X