Robo Shankar - எப்பவும் என்கூடவே இருங்க.. ரோபோ ஷங்கர் மனைவி உருக்கம்
சென்னை: Robo Shankar (ரோபோ ஷங்கர்) நகைச்சுவை நடிகர் ரோபா ஷங்கரின் மனைவி, எப்போதும் என்கூடவே இருங்கள் என உருக்கமாக இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருக்கிறார்.
கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது நகைச்சுவையால் பலரையும் கவர்ந்தவர் ரோபோ ஷங்கர். விஜயகாந்த் போல் அச்சு அசலாக உடல்மொழியையும், மிமிக்ரியையும் கொடுத்து அதகளமும் செய்தார். சின்னத்திரையில் ஜொலித்தால் வெள்ளித்திரையிலும் வாய்ப்பு கிடைக்கும் என்பதற்கேற்ப திரைப்படங்களிலும் அறிமுகமானார் ரோபோ ஷங்கர்.

ரோபோ ஷங்கருக்கு குவிந்த பட வாய்ப்புகள்: அதன்படி தனுஷுடன் மாரி, எழில் இயக்கத்தில் வெளியான வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், பாலாஜி மோகன் இயக்கத்தில் வாயை மூடி பேசவும் தொடர்ந்து பல படங்களில் நடித்த ரோபோ ஷங்கர் அஜித்துடன் விஸ்வாசம் படத்திலும் நடித்தார். சின்னத்திரை போலவே வெள்ளித்திரையிலும் ரோபோ ஷங்கர் தனது திறமையை நிரூபித்திருக்கிறார்.
பார்த்திபன் Vs ரோபோ: இந்தச் சூழலில் பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. அதில் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது மேடையில் பார்த்திபனும், ஏ.ஆர்.ரஹ்மானும் அமர்ந்திருந்தபோது பார்த்திபனின் மைக் வேலை செய்யாமல் போக உடனடியாக மேடையில் இருந்தவாறு ரோபோ ஷங்கரை நோக்கி மைக்கை வீசியெறிந்து கடிந்துகொண்டார் பார்த்திபன். இந்தச் சம்பவம் அந்த சமயத்தில் சர்ச்சையாகி பிறகு சரியானது.
உடல் நலக்குறைவில் ரோபோ ஷங்கர்: ரோபோ ஷங்கர் நிறைய படங்களில் கமிட்டாகிவந்த சூழலில் திடீரென அவரது உடல் எடை ரொம்பவே சரிந்தது. ஆஜானுபாகுவாக இருந்த ரோபோ ஷங்கர் உடல் மெலிந்து பார்ப்பதற்கே பரிதாபமாக காட்சியளித்தார். அவரை பார்த்த பலரும் ரோபோ ஷங்கருக்கு என்னாச்சு என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்ப தொடங்கினர்.

இப்படி ஆனதற்கு குடிதான் காரணமா?: ரோபோ ஷங்கர் இப்படி ஆனதற்கு அவருக்கு அளவுக்கு அதிகமான குடிப்பழக்கம் இருந்தது என்றும், இதன் காரணமாக அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது என்றும் சிலர் பேச தொடங்கினர். ஆனால் இதுகுறித்து ரோபோ ஷங்கர் தரப்பு மௌனம் காக்க; அவருக்கு நெருக்கமான நடிகர் போஸ் வெங்கட், ரோபோ ஷங்கருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது உண்மைதான். விரைவில் உடல்நலம் தேறி மீண்டு வந்துவிடுவார் என நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

மனைவியின் உருக்கமான் பதிவு: இந்நிலையில் ரோபோ ஷங்கரின் மனைவி பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அதில் தனது தாயின் புகைப்படத்தை பகிர்ந்து, "நீ எங்க இருந்தாலும் பரவாயில்லைம்மா. எப்பவும் என்க்கூடவே இரும்மா.என்னோட பலம்,பலவீனம் எல்லாமுமா இருந்து வழி நடத்தனும்மா.ரொம்ப மிஸ் பண்ணுறேன் லலிதாம்மா" என குறிப்பிட்டுள்ளார். பிரியங்காவின் தாய் இறந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்ட்டது. அதன் காரணமாக இப்படி ஒரு உருக்கமான பதிவை பதிவிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











