மகளை தொடர்ந்து அம்மாவும்.. பெரிய பொட்டு.. கழுத்தில் மாலை.. பளபள சேலை.. லுக்கே மிரட்டலா இருக்கே!

Recommended Video

Robo Shankar wife Priyanka Shankar introduced as actress in Kanni Maadam movie

சென்னை: கன்னிமாடம் படம் இன்று முதல் திரைக்கு வந்துள்ள நிலையில் இந்த படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியிருக்கும் ரோபோ சங்கரின் மனைவி ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறார்.

நடிகர் போஸ் வெங்கட் முதல் முறையாக இயக்கி இருக்கும் படம் கன்னி மாடம். இந்தப் படத்தை ரூபி பிலிம்ஸ் சார்பில் ஹஸீர் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் ஸ்ரீராம் கார்த்திக் ,சாயா தேவி ஆகியோர் லீடிங் ரோலில் நடித்துள்ளனர். மேலும் விஷ்ணு ராமசாமி, ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், சூப்பர்குட்ஸ் சுப்பிரமணியன், லலினா பிரின்ஸ், மைம் கோபி, பிரியங்கா சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ரோபோ சங்கர் மகள்

ரோபோ சங்கரின் மனைவியான பிரியங்கா சங்கர், இந்தப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியிருக்கிறார். ஏற்கனவே அவரது மகள் இந்திரஜா சங்கர் பிகில் படத்தில் பாண்டியம்மாள் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது.

 மிரட்டல் லுக்

மிரட்டல் லுக்

இந்நிலையில் ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா சங்கர், கன்னி மாடம் படத்தின் முலம் நடிகையாக அறிமுகமாகியிருக்கிறார். பள பள சேலையில், நெற்றியில் பெரிய பொட்டு கழுத்தில் மாலை என மிரட்டல் லுக்கில் இருக்கிறார் பிரியங்கா.

 நல்ல நடிப்பு

நல்ல நடிப்பு

பார்க்கும் தோற்றம்தான் பயங்கரமாக இருந்தாலும் அவருக்கு முதல் படத்திலேயே நடிக்க நல்ல வாய்ப்பு. தோற்றத்தில் வில்லி போன்று இருந்தாலும், உள்ளுக்குள் இரக்க குணம் உள்ளவராய் நடித்து இருக்கிறாராம் பிரியங்கா சங்கர். அவரது தோற்றத்துக்கு மேலும் பல பட வாய்ப்புகள் கிடைக்கும் என்கின்றனர் ரசிகர்கள்.

குடும்பமே வந்துவிட்டது

குடும்பமே வந்துவிட்டது

குறிப்பாக சொர்ணாக்கா போன்ற கேரக்டருக்கு பிரியங்க கன கச்சிதமாக பொருந்துவார் என்கின்றனர் ரசிகர்கள். தமிழ் சினிமாவில் பல மூத்த நடிகர்கள்தான் தங்களின் குடும்பத்துடன் நடித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரோபோ சங்கரின் குடும்பமும் கன்னி மாடம் படத்தின் மூலம் திரைதுறைக்கு வந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X