விஜய் டிவி ரோபோ ஷங்கரின் மனைவி 20 ஆண்டுகளுக்கு முன்பே படங்களில் நடித்துள்ளாரா வைரலாகும் புகைப்படம்!
சென்னை : விஜய் டிவியில் காமெடியனாக அறிமுகமாகி இப்பொழுது திரைப்படங்களில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகர் ரோபோ ஷங்கர்.
ரோபோ ஷங்கரை தொடர்ந்து அவரது மனைவி பிரியங்காவும் இப்பொழுது படங்களில் நடித்து வருகிறார்.
20 ஆண்டுகளுக்கு முன்பே பிரியங்கா பிரபல சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

ரோபோ ஷங்கர்
விஜய் டிவியில் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்றான கலக்கப்போவது யாருவில் மிமிக்ரி செய்து அசத்தி வந்த நடிகர் ரோபோ ஷங்கர் ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் இப்பொழுது படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். ஷங்கரை தொடர்ந்து அவரது மகள் இந்திரஜாவும் பிகில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

குக் வித் கோமாளி
ரோபோ ஷங்கரை தொடர்ந்து அவரது மனைவி பிரியங்காவும் இப்பொழுது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ரோபோ ஷங்கரும் மனைவி பிரியங்காவும் ஜோடியாக கலந்து கொண்டு செய்த காமெடிகள் ரசிகர்களை கவர்ந்தது. மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரியங்கா கலந்து கொண்டது மேலும் பிரபலம் அடைய செய்ய இப்பொழுது பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

20 ஆண்டுகளுக்கு
அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி சர்வதேச அளவில் விருதுகளை வாங்கிக் குவித்த கன்னிமாடம் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் பிரியங்கா நடித்திருந்தார். மேலும் சில படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி வரும் நிலையில் 20 ஆண்டுகளுக்கு முன்பே பிரியங்கா பிரபல சூப்பர் ஹிட் திரைப்படம் ஒன்றில் நடித்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தொகுப்பாளினியாக
பல தடைகளை தாண்டி ஹீரோவான விக்ரமுக்கு மாஸ் ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்றுத்தந்த தில் திரைப்படம் இயக்குனர் தரணியின் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது . இந்தப்படம் விக்ரமுக்கும் தரணிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. விக்ரம், லைலா, நாசர், விவேக், வையாபுரி என்று பலர் நடித்த இந்த படத்தில் சிறிய காட்சியில் பிரியங்கா நடித்திருப்பார். லைலா குல்ஃபி செய்வது எப்படி என்ற சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் அதில் தொகுப்பாளினியாக ரோபோ ஷங்கரின் மனைவி பிரியங்கா நடித்துள்ளார். இப்பொழுது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பே படங்களின் நடித்துள்ளாது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளதோடு 20 ஆண்டுகள் பிறகு ரசிகர்களால் அடையாளம் காணப்பட்டு வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











