Robo Shankar: ரோபோ சங்கர் செய்த செயலால் கடுப்பான மனைவி.. ஓங்கி ஒரே அறை.. என்ன ஆச்சு?

சென்னை: சமீபத்தில் தனது மகள் இந்திரஜா சங்கருக்கும் தனது மனைவியின் தம்பி கார்த்திக்கும் நிச்சயதார்த்தத்தை திருமணம் போல செய்து அமர்க்களப்படுத்தி இருந்தார் ரோபோ சங்கர். அப்போது பெரியவர்கள் சூழ்ந்திருக்க மாலை மாற்றிய கையோடு இந்திரஜா மற்றும் கார்த்திக் உதட்டில் முத்தம் கொடுத்துக் கொண்டனர். அந்த வீடியோ தீயாக பரவியது. இந்நிலையில், அதே போன்ற முயற்சியில் ரோபோ சங்கரும் ஈடுபட்டு இருக்கிறார்.

விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வித விதமான காமெடிகளையும் ரோபோ போல நடித்தும் அட்டகாசம் செய்து வந்த ரோபோ சங்கர் ரெளத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வாயை மூடி பேசவும், மாரி, புலி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என பல படங்களில் காமெடி நடிகராக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.

Robo Shankar wife slapped her husband while he tries to kiss her on lips

குடும்பமே பிரபலங்கள் தான்: ரோபோ சங்கர் காமெடி நடிகராக வலம் வரும் நிலையில், அவரது மனைவி பிரியங்கா மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டாக மாஸ் காட்டி வருகிறார். மகள் இந்திரஜா சங்கர் தளபதி விஜய் நடித்த பிகில் படத்தின் மூலம் அறிமுகமான நிலையில், கார்த்தியின் விருமன் உள்ளிட்ட படங்களில் காமெடி நடிகையாக நடித்திருந்தார். சர்வைவர் உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்ட அவர் பிக் பாஸில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனது மாமாவை நிச்சயம் செய்துக் கொண்டார். சீக்கிரமே திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார்.

கோலாகலமாக நடந்த நிச்சயதார்த்தம்: சிறு வயதில் இருந்தே அம்மாவின் தம்பி கார்த்தியுடன் பழகி வந்த இந்திரஜா சங்கர் முறைமாமனை திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்த நிலையில், பிரபலங்களுக்கு எல்லாம் பத்திரிகை வைத்து தனது திருமண நிச்சயதார்த்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். கடந்த வாரம் கோலாகலமாக நிச்சயதார்த்த விழா நடைபெற்ற நிலையில், அதன் புகைப்படங்களும் வீடியோக்களும் வரிசையாக வெளியாகி வருகின்றன.

Robo Shankar wife slapped her husband while he tries to kiss her on lips

அனைவர் முன்னிலையில் லிப் கிஸ்: நிச்சயதார்த்த விழாவில் மாமா கார்த்திக்கு மாலை போட்ட இந்திரஜா சங்கர் அவரது உதட்டில் முத்தம் கொடுத்த வீடியோ சமீபத்தில் வெளியாகி தீயாக பரவியது. நிச்சயதார்த்தத்துக்கு பதில் திருமணத்தையே நடத்தி வைத்திருக்கலாம் என ரசிகர்கள் எல்லாம் அதை பார்த்து கமெண்ட் அடித்தனர்.

மனைவியின் உதட்டில்: இந்நிலையில், மகள் இந்திரஜா சங்கர் செய்ததை போலவே தனது மனைவி பிரியங்காவுக்கு உதட்டில் முத்தம் கொடுக்க நடிகர் ரோபோ சங்கர் முயற்சித்த வீடியோ ஒன்றும் அதற்கு ஏற்பட்ட பின் விளைவுகளும் தற்போது வெளியாகி ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தி உள்ளது.

ஒரே அறை: மகளும் மருமகனும் போட்டோ எடுத்த நிலையில், அவர்களை பின்னாடி நிற்க வைத்து நீங்க ரெண்டு பேரும் மூக்கை மூக்கு உரசியபடி போஸ் கொடுங்க என்று சொன்னதும் பிரியங்கா அதற்கு ஒப்புக் கொண்டு காதலுடன் தனது கணவரின் மூக்கை உரச இதுதான் சான்ஸ் என உதட்டில் முத்தம் கொடுக்க முயற்சி செய்து விட்டார் ரோபோ சங்கர். அதனால், திடீரென பயந்து போன பிரியங்கா அவரது கன்னத்தில் அடி கொடுக்க முயற்சித்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. உடல் நலக்குறைவு காரணமாக இருந்த ரோபோ சங்கர் அதிலிருந்து மீண்டு மீண்டும் சினிமாவில் பழையபடி நடிக்க ஆரம்பித்துள்ளார். கூடிய விரைவிலேயே தனது மகளின் திருமணத்தையும் நடத்தி வைக்க முடிவு செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X