Robo Shankar Wife: வராகி அம்மனாகவே மாறிய ரோபோ சங்கர் மனைவி.. கையெடுத்துக் கும்பிடும் ரசிகர்கள்!
சென்னை: காந்தாரா படத்தில் வராக ரூபம் பாடல் ஹிட்டடித்த நிலையில், மாமன்னன் படத்தில் பன்றி குறித்த காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், நடிகர் ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா சங்கர் வராகி அம்மனாகவே மேக்கப் போட்டு மாறிய வீடியோ ரசிகர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.
கணவர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் ஒல்லியாக மெலிந்த நிலையில், மருத்துவமனையில் அவருக்கான சிகிச்சையளித்து ரொம்பவே கஷ்டப்பட்டுள்ளார் அவரது மனைவி பிரியங்கா சங்கர்.

மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டான அவர் தற்போது வராகி அம்மனாக ரூபமெடுத்த வீடியோ ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
ரோபோ சங்கர் மனைவி: விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு காமெடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்கிய ரோபோ சங்கர் அங்கிருந்து அப்படியே சினிமாவுக்குள் நுழைந்த நிலையில், ஏகப்பட்ட படங்களில் காமெடியனாக நடித்து கலக்கி உள்ளார்.
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் "அன்னைக்கு காலையில ஆறு மணிக்கு" என அவர் செய்யும் காமெடி அலப்பறைகள் எல்லாம் வேற லெவலில் டிரெண்டாகி வருகிறது. ரோபோ சங்கரின் மனைவி பிரியா சங்கர் மற்றும் மகள் இந்திரஜா சங்கர் என குடும்பமே நடிகர்களாகவும் பிரபலங்களாகவும் வலம் வருகின்றனர்.
வராகி அம்மனாக மாறிய ரோப சங்கர் மனைவி: சின்னத்திரை ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு கலக்கி வரும் பிரியங்கா சங்கர் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டாக வலம் வரும் நிலையில், வராகி அம்மனாகவே மேக்கப் போட்டுக் கொண்டு காட்சியளித்த வீடியோவை அவரது மகள் இந்திரஜா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
வராகி அம்மனாக சிங்கத்தின் மீது வீற்றிருக்கும் பிரியங்கா சங்கருக்கு பூசாரிகள் தீபாராதனை எல்லாம் காட்டி வழிபாடு நடத்தினர். அவர் அருகே ரோபோ சங்கர், அவரது மகள் இந்திரஜா சங்கர் உள்ளிட்ட பலர் நின்று சாமி கும்பிட்டு ஆசி பெற்ற வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
பக்தி பரவசத்தில் ரசிகர்கள்: இந்திரஜா சங்கர் தனது அம்மா வராகி அம்மனாக மேக்கப் போட்டு மாறிய வீடியோவை ஷேர் செய்த நிலையில், ஏகப்பட்ட சினிமா பிரபலங்களும் சீரியல் நடிகைகளும் வாவ் சூப்பர், அப்படியே வராகி அம்மனாக மாறிட்டீங்க என்றும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் வராகி அம்மன் எப்போதுமே காப்பாத்துவாங்க என்றும் கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











