இப்போதுதான் திருமணம் ஆச்சு.. அதுக்குள்ள விவாகரத்தா? இந்திரஜா உருக்கமான பேட்டி!

சென்னை: நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவின் திருமணம் திரையுலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு படுகோலாகலமாக நடைபெற்றது. ஆட்டம் பாட்டத்துடன் திருமணம் நடந்த முடிந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆனாலும், திருமணம் தொடர்பான சர்ச்சைகள் ஓயாமல் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கிறது. இதுகுறித்து இந்திரஜா உருக்கமாக பேட்டி அளித்துள்ளார்.

சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் கலக்கிக் கொண்டு இருக்கும் காமெடி நடிகர் ரோபோ சங்கர். இவரின் மகள் இந்திரஜாவும் அட்லீ இயக்கத்தில் உருவான பிகில் படத்தில் பாண்டியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் இவரின் நடிப்பு பாராட்டை பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து, விருமன் படத்திலும் நடித்திருந்தார்.

Robo Shankar s daughter Indraja Emotional interview after her marriage

நடிகர் ரோபோ ஷங்கர்: ரோபோ சங்கர் மனைவி பிரியங்காவின் வளர்ப்பு தம்பியான கார்த்திக்கிற்கும், இந்திரஜாவுக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தை மிக பிரம்மாண்டமாக நடத்தி அனைவரையும் வியக்க வைத்துவிட்டார் ரோபோ சங்கர். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் இந்த திருமணம் நடைபெற்றது. இதில், கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பார்த்திபன், கே.பாக்யராஜ், பாண்டியராஜன், பிருத்விராஜன், ராமராஜன், தம்பி ராமய்யா, சுரேஷ் சக்ரவர்த்தி, சுப்பு பஞ்சு, செளந்தரராஜா, மாஸ்டர் மகேந்திரன், கலா மாஸ்டர், இயக்குனர்கள் S. P. முத்துராமன் என பலர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.

கண்டபடி எழுதினார்கள்: திருமணம் நடந்து ஒரு மாதமான பிறகும் திருமணம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இதுகுறித்து பேசிய இந்திரஜா, பிரபலமாக இருப்பதால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. திருமணத்திற்கு முன் அப்பாவிற்கு உடல்நிலை ரொம்ப மோசமாக இருந்தது. அவருக்கு என்ன ஆகுமோ என்று அனைவரும் பயந்து கொண்டு இருந்தோம், ஆனால், சோஷியல் மீடியாவில் அவருக்கு அந்த பழக்கம் இருக்கு, இந்த பழக்கம் இருக்கும் என்று கண்டபடி எழுதினார்கள். இருந்தாலும் அனைத்திற்கும் நாங்கள் பதில் அளித்துக்கொண்டுதான் இருந்தோம்,

முத்த சர்ச்சை: என் திருமண நிச்சயத்தில் அப்பாவிற்கு உதட்டில் முத்தம் கொடுத்தேன். அதையும் விமர்சித்து பேசினார்கள். என் அப்பா, நான் பிறந்ததில் இருந்தே இப்படித்தான் முத்தம் கொடுத்து விளையாடி இருக்கிறேன். வளர்ந்துவிட்டால் நான் மகள் இல்லை என்று ஆகிவிடுமா. அதே போல, ரிஷப்ஷனில் அம்மாவும், என் கணவரும் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்த போது, கன்னத்தில் முத்தம் கொடுக்கும் போது அம்மா திரும்பியதால் உதட்டில் கொடுத்தது போலாகிவிட்டது. அக்காவுக்கு இப்படி முத்தம் கொடுக்கலாமா என்றும் அநாகரீகமாக கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

விவாகரத்தா: இதுக்கூட பரவா இல்ல, கணவருடன் நான் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து கமெண்ட் செக்ஷனில் விரைவில் விவாகரத்து என பதிவிட்டுள்ளார். திருமணமான ஒரே மாதத்தில் எப்போ விவாகரத்துனு கேட்கிறார்கள். எத்தனையே கமெண்ட்டுகளை தள்ளிவிட்டு வந்தாலும், இதுபோன்ற கமெண்ட்டுகளை பார்க்கும் போது மனம் வருத்தப்படுகிறது. எப்படி உங்களால் கேட்க முடிகிறது. உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு இப்படி நடந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப்பாருங்கள். இதெல்லாம் உங்களை சொல்லி தப்பில்லை உங்களுடைய அம்மா அப்பா உங்களை அப்படி வளர்த்துள்ளார்கள். உங்கள் பெற்றோரை பார்த்து தான் நாலுவார்த்தை கேட்க வேண்டும் என்று இந்திரஜா உருக்கமாக பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X