அப்படி முத்தம் கொடுத்தா தப்பா.. உங்க பார்வை தான் தப்பு.. நான் தப்பானவ இல்ல!

சென்னை: நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவின் திருமணம் திரையுலகமே வியந்து பார்க்கும்படி படுகோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணம் ஆட்டம் பாட்டத்துடன் நடந்து கொண்டிருந்த போது மாப்பிள்ளை ரோபோ சங்கரின் மனைவிக்கு உதட்டில் முத்தமிடும் போட்டோ ஒன்று வெளியாகி மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு இந்திரஜா பதிலளிக்கும் வகையில் வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது.

தமிழில் சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் கலக்கிக் கொண்டு இருக்கும் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர். இவரின் மகள் இந்திரஜாவும் அட்லீ இயக்கத்தில் உருவான பிகில் படத்தில் பாண்டியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் இவரின் நடிப்பு பாராட்டை பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து, விருமன் படத்தில் நடித்திருந்தார்.

Robo Shankar s daughter Indraja explained the kiss controversy

நடிகர் ரோபோ ஷங்கர்: இதையடுத்து, ரோபோ சங்கர் மனைவி பிரியங்காவின் வளர்ப்பு தம்பியான கார்த்திக்கிற்கும், இந்திரஜாவுக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தை மிக பிரம்மாண்டமாக நடத்தி அனைவரையும் வியக்க வைத்துவிட்டார் ரோபோ சங்கர். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என இந்த கல்யாணம் ஒருசில நாட்களுக்கு நடந்த இந்த திருமணத்தில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

வாழ்த்திய பிரபலங்கள்: இந்திரஜா மற்றும் கார்த்திக்கின் திருமணம் மதுரையில் நடைபெற்ற நிலையில், வரவேற்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பார்த்திபன், கே.பாக்யராஜ், பாண்டியராஜன், பிருத்விராஜன், ராமராஜன், தம்பி ராமய்யா, சுரேஷ் சக்ரவர்த்தி, சுப்பு பஞ்சு, செளந்தர்ராஜா, மாஸ்டர் மகேந்திரன், கலா மாஸ்டர், இயக்குனர்கள் S. P. முத்துராமன் என பலர் கலந்து கொண்டனர்.

மாப்பிள்ளை கொடுத்த முத்தம்: கோலாகலமாக நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பிரியாங்கா தனது மருமகனுடன் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்த போது, மாப்பிள்ளை ரோபோ ஷங்கரின் மனைவிக்கு முதட்டில் முத்தம் கொடுத்துள்ளார். இது இணையத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், அக்காவுக்கு இப்படி முத்தம் கொடுக்கலாமா என்றும் இது அநாகரீகம் என கழுவி ஊற்றி வருகின்றனர்.

முத்தம் கொடுத்தா தப்பா: இந்நிலையில், இந்திரஜா தனது நிச்சயதார்த்தத்தின் போது, தனது அப்பா ரோபோ ஷங்கருக்கு உதட்டில் முத்தம் கொடுத்து இருந்தார். இதுவும் அப்போது சர்ச்சையானது. அதற்கு பதில் அளித்துள்ள இந்திரஜா, என் அப்பாவுக்கு முத்தம் கொடுத்த போட்டோவை பார்த்த பலர், அப்படி அப்பாவுக்கு தரலாமா என விமர்சித்தார்கள். அவர் என் அப்பா, நான் பிறந்ததில் இருந்தே அவருக்கு இப்படித்தான் முத்தம் கொடுத்து விளையாடி இருக்கிறேன்.

நான் தப்பானவ இல்ல: வளர்ந்துவிட்டால் நான் மகள் இல்லை என்று ஆகிவிடுமா? நான் முத்தம் கொடுத்ததில் தவறு இல்லை, அதை தப்பான கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களின் கண்ணில் தான் பிரச்சனை, உங்களை உங்க அம்மா தப்பா வளர்த்து இருக்கிறார்கள். நான் தப்பானவ இல்லை, என்னை அப்பா சரியாக வளர்த்து இருக்கிறார் என்று கூறியிருந்தார். இரண்டு முத்த சர்ச்சைக்கும் இதுதான் பதில் என்பது போல நெட்டிசன்கள் தற்போது இந்த வீடியோவை டிரெண்டாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X