தவமின்றி கிடைத்த வரமே.. ரோபோ சங்கர் வீட்டில் அடுத்த விசேஷம்.. இந்திரஜாவை நினைத்து கணவர் உருக்கம்

சென்னை: கோலிவுட்டில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வருபவர் ரோபோ சங்கர். இவரது மகள் இந்திரஜா கார்த்திக் என்பவரை கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு உச்சக்கட்ட காதலோடு இரண்டு பேரும் தங்களது வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் காதலுக்கு அடையாளமாக அண்மையில்தான் ஒரு ஆண் குழந்தை பிறந்தான். இந்நிலையில் இந்திரஜாவின் கணவர் உருக்கத்துடன் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டிருக்கிறார்.

கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது நகைச்சுவையால் பலரையும் கவர்ந்தவர் ரோபோ சங்கர். விஜயகாந்த் போல் அச்சு அசலாக உடல்மொழியையும், மிமிக்ரியையும் கொடுத்து அதகளமும் செய்தார். சின்னத்திரையில் ஜொலித்தால் வெள்ளித்திரையிலும் வாய்ப்பு கிடைக்கும் என்பதற்கேற்ப திரைப்படங்களிலும் அறிமுகமானார் ரோபோ சங்கர்.

பட வாய்ப்புகள்: அதன்படி தனுஷுடன் மாரி, எழில் இயக்கத்தில் வெளியான வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், பாலாஜி மோகன் இயக்கத்தில் வாயை மூடி பேசவும் என தொடர்ந்து பல படங்களில் நடித்த ரோபோ சங்கர் அஜித்துடன் விஸ்வாசம் படத்திலும் நடித்தார். சின்னத்திரை போலவே வெள்ளித்திரையிலும் ரோபோ சங்கர் தனது திறமையை நிரூபித்திருக்கிறார். கமல் ஹாசனின் தீவிர ரசிகர் ரோபோ சங்கர் என்பது நினைவுகூரத்தக்கது.

மரணத்திலிருந்து பிழைத்த ரோபோ: ரோபோ ஷங்கர் நிறைய படங்களில் கமிட்டாகிவந்த சூழலில் திடீரென அவரது உடல் எடை ரொம்பவே சரிந்தது. ஆஜானுபாகுவாக இருந்த ரோபோசங்கர் உடல் மெலிந்து பார்ப்பதற்கே பரிதாபமாக காட்சியளித்தார். அவரை பார்த்த பலரும் ரோபோ சங்கருக்கு என்னாச்சு என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்ப தொடங்கினார். மேலும் ரோபோ சங்கரின் உடல்நிலை மோசமானதற்கு குடிதான் காரணம் என்று பலர் பேசினர். அதனை ரோபோ சங்கரும் ஒத்துக்கொண்டார். எப்படியோ நோயிலிருந்து மீண்டு இப்போது முழு உடற்தகுதியுடன் இருக்கிறார்.

Robo Shankar s daughter Indraja has been wished a happy birthday by her husband Karthick

மகள் இந்திரஜாவுக்கு திருமணம்: இதற்கிடையே ரோபோ சங்கருக்கு இந்திரஜா என்ற மகள் இருக்கிறார். இவர் அட்லீ இயக்கத்தில் உருவான பிகில், முத்தையா இயக்கத்தில் உருவான விருமன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். பிகில் படத்தில் அவர் ஏற்றிருந்த பாண்டியம்மாள் என்ற கேரக்டரில் சிறப்பாக நடித்திருந்த அவர் அதற்காக பாராட்டையும் பெற்றார். இந்தச் சூழலில் அவர் கார்த்திக் என்பவரை கடந்த வருடம் திருமனம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் படு பிரமாண்டமாக நடந்தது.

ஆண் குழந்தை: திருமணத்துக்கு பிறகு அவர்களது வாழ்க்கை அமைதியாகவும், காதலோடும் நகர்ந்துகொண்டிருக்கிறது. அண்மையில்கூட அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.குடும்பத்தின் முதல் வாரிசு என்பதால் ரோபோ சங்கர் குடும்பமே பெரிய மகிழ்ச்சியில் இருக்கிறது. அதுமட்டுமின்றி பிறந்த குழந்தைக்கு தன்னுடைய தாய் பாலில் இருந்து இந்திரஜா மோதிரம் ஒன்றை செய்து தன்னுடைய மகனுக்கு போட்டிருக்கிறார். அது பலரையும் கவர்ந்திருந்தது.

கார்த்திக்கின் போஸ்ட்: இந்நிலையில் இந்திரஜா தனது பிறந்தநாளை கொண்டாடும் சூழலில் அவர் குறித்து கணவர் கார்த்திக் உருக்கமாக போஸ்ட் போட்டிருக்கிறார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "அன்பு பொண்டாட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நீ என் வாழ்க்கையில் வந்த பிறகு எனது மகிழ்ச்சியை மீண்டும் திருத்தி எழுதினாய். ஒவ்வொரு நாளையும் காதல் கதையாக மாற்றியதற்கு உனக்கு நன்றி. இன்று போல் எப்போதும் உன்னை நீ கொண்டாடு. தவமின்றி கிடைத்த வரமே. லவ் யூ பாப்பா" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X