மாமியார் உதட்டில் முத்தம்.. ரோபோ சங்கர் மருமகன் விளக்கம்.. என்ன சொல்லிருக்காரு பாருங்க?
சென்னை: ரோபோ சங்கரின் மகள் இந்திராஜாவின் திருமணம் கடந்த மாதம் 24ஆம் தேதி மதுரையில் நடைபெற்றது. திருமண வரவேற்பு சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது. இதில் கமல் ஹாசன், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்திரஜா தனது உறவினரான கார்த்திக் என்பவரையே திருமணம் செய்திருக்கிறார். இந்தச் சூழலில் திருமண வரவேற்பின்போது ரோபோ சங்கரின் மனைவியின் உதட்டில் மருமகன் கார்த்திக் முத்தம் கொடுத்தது சர்ச்சையை கிளப்பியது.
சின்னத்திரையில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமடைந்தவர் ரோபோ சங்கர். தனது திறமையால் படிப்படியாக வளர்ந்த அவர் டிவியில் இருக்கும்போதே தமிழ்நாடு முழுவதும் பிரபலம் ஆகிவிட்டார். அது இது எது உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அவர் செய்த காமெடிகள் அப்போது வெகு பிரபலம். அதனையடுத்து சினிமாவுக்குள் நுழைந்த அவர் பெரிய திரையிலும் தனது திறமையை நிரூபித்தார். மாரி, வாயை மூடி பேசவும் உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பு அட்டகாசமாக இருந்தன.

வரிசையாக வாய்ப்புகள்: இதனையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் வரிசையாக கிடைத்தன. அதன்படி விஸ்வாசம், வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் என தொடர்ந்து நடித்த அவர் புகழின் உச்சிக்கு சென்றார். முக்கியமாக காமெடி ஆக்டருக்கான இடம் வெற்றிடமாக இருக்கிறது என்று ஒரு பேச்சு எழுந்த சூழலில் அதனை ரோபோ சங்கர் நிரப்பிவிடுவார் என்று ரசிகர்களால் ஆரூடம் கூறப்பட்டது. அதனை நோக்கித்தான் அவரது வளர்ச்சியும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உடல்நலக்குறைவு: நிலைமை இப்படி இருக்க அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அளவுக்கதிகமான மதுப்பழக்கம்தான் அதற்கு காரணம். அதனை ரோபோவும் பல பேட்டிகளில் ஒத்துக்கொண்டார். குறிப்பாக சாவை தொட்டுவிட்டு வந்திருக்கிறேன் என்றும் சொல்லியிருக்கிறார். அவருக்கு இந்திரஜா என்ற மகள் இருக்கிறார். அவரும் பிகில் படத்தின் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். அதில் பாண்டியம்மா என்ற கேரக்டரில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல்களை பெற்றார்.
திருமணம்: தொடர்ந்து விருமன் படத்தில் நடித்த அவருக்கு திருமணம் செய்துவைக்க குடும்பத்தார் முடிவு செய்தனர். அதன்படி ரோபோ சங்கரின் மனைவியின் தம்பியான (உறவு முறையில் தம்பி இல்லை என்றும் ஒரு பேச்சு உண்டு) கார்த்திக் என்பவரை மாப்பிள்ளையாக உறுதி செய்தனர். அதனையடுத்து இரண்டு பேரின் திருமணம் மதுரையில் கடந்த மாதம் 24ஆம் தேதி நடைபெற்றது. அதில் சூரி, அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பிறகு திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற்றது.
சர்ச்சை: அப்போது ரோபோ சங்கர் மனைவியின் உதட்டில் மருமகன் கார்த்திக் முத்தம் கொடுத்தார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல் ரோபோ சங்கரின் உதட்டில் மகள் இந்திரஜா முத்தம் கொடுத்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து இந்திரஜா அளித்த விளக்கத்தில், பார்ப்பவர்களின் பார்வையில் தவறு உள்ளது. ரோபோ சங்கர் எனது அப்பா என்று கூறியிருந்தார். ஆனால் கார்த்திக் எதுவும் கூறாமல் இருந்தார்.
கார்த்திக் விளக்கம்: இந்நிலையில் ரோபோ சங்கரின் மனைவி உதட்டில் முத்தம் கொடுத்தது குறித்து முதன்முறையாக விளக்கம் அளித்திருக்கிறார் கார்த்திக். இதுகுறித்து அவர் அளித்த விளக்கத்தில், "மாமியாரின் கன்னத்தில் முத்தமிட வந்தேன். அப்போது திடீரென்று அவர் திரும்பிவிட்டதால் உதடுகளில் அந்த முத்தம் பட்டுவிட்டது. அதை ஃபோட்டோவும் எடுத்தனர். இது எதிர்பாராமல் நடந்த சம்பவம்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











