ரோபோ சங்கர் மீது மருமகனுக்கு என்ன பாசம் பாருங்க?.. உடைந்து போய்விட்டாரே.. சோகத்தை எப்படி கடப்பாரோ?

சென்னை: ரோபோ சங்கரின் மறைவுதான் கடந்த சில நாட்களாக திரைத்துறையில் தீராத சோகமாக இருக்கிறது. உடல்நலம் தேறி மீண்டும் பிழைத்த அவர்; இப்படி திடீரென உயிரிழப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. பலரும் அந்த இறப்பு செய்தியை கேட்டு அதிர்ச்சிதான் அடைந்தார்கள். மேலும் திரைத்துறையில் பெரும்பாலானவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிலையில் அவரது மருமகன் உருக்கத்தோடு போஸ்ட் ஒன்றை போட்டிருக்கிறார்.

ரோபோ சங்கர் பன்முக திறமை கொண்ட கலைஞனாக வலம் வந்தவர். மதுரையில் ஆரம்பித்த அவரது கலை பயணம் சென்னையில் முடிவடைந்திருக்கிறது. ஆரம்பத்தில் தனது உடல் முழுவதும் வெள்ளி பெயின்ட்டை அடித்துக்கொண்டு ரோபோ போல் நடனமாடி ஃபேமஸ் ஆன அவர்; பிறகு தனியார் சேனலில் தவிர்க்க முடியாத ஆளுமையாக திகழ்ந்து தமிழ்நாடு முழுவதும் பிரபலமடைந்தார். அந்த பிரபல்யம் சங்கருக்கான திரை கதவையும் திறந்து வைத்தது.

சனிக்கிழமை ரோபோ: தனுஷ் ஹீரோவாக நடித்த மாரி திரைப்படத்தில்தான் முழுநேர சினிமா நடிகராக மாறினார் ரோபோ சங்கர். அந்தப் படத்தில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரமும், அவரது நடிப்பும் பலரையும் சிரிக்க வைத்தது. அதனையடுத்து வரிசையாக படங்களில் நடித்து தனக்கான தனி இடத்தை பிடித்தார். சினிமாவில் பிஸியாக இருந்தாலும் சின்னத்திரையிலும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கலகலப்பை ஊட்டியவர் அவர்.

Robo Shankar s son-in-law Karthik has posted a heartfelt Facebook post about his demise
Photo Credit:

ரோபோ சங்கர் மீண்டார்: இரண்டு வருடங்களுக்கு முன்பு சங்கருக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. தொடக்க காலத்தில் அவர் உடலில் அடித்துக்கொண்ட வெள்ளி பெயின்ட், பிற்காலத்தில் அவர் எடுத்துக்கொண்ட மதுவின் அளவு ஆகியவை சேர்ந்து அவரை படுக்கையில் சாய்த்தன. இருப்பினும் சிகிச்சை பெற்று நல்லபடியாக மீண்டு வந்த அவர்; புதிய ரோபோ சங்கராக பொது இடங்களில் வலம் வந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த ரோபோ சங்கர்: இப்படிப்பட்ட நிலைமையில் ஷூட்டிங்கில் கலந்துகொண்டிருந்த அவர் திடீரென ரத்த வாந்தி எடுத்து மயக்கமடைந்தார். உடனடியாக சென்னை பெருங்குடியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே மரணத்தை வென்று வந்தவர் என்பதால்; இந்த முறையும் நல்லபடியாக வந்துவிடுவார் என்றுதான் அவரது குடும்பத்தினர் நம்பினார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இறுதி சடங்கு செய்த மருமகன்: அவரது இறுதி சடங்கு நேற்று முன்தினம் நடந்தது. அவருக்கு ஒரே மகள் என்பதால் இறுதி சடங்கை அவரது மருமகன் கார்த்திக்தான் செய்தார். அதனைப் பார்த்து பலரும், ரோபோ சங்கருக்கு மகன் போல் இருந்து அத்தனையையும் கார்த்திக்தான் பார்த்துக்கொண்டார் என்று உருக்கத்துடன் கூறினார்கள். இந்நிலையில் கார்த்திக் தனது முகநூல் பக்கத்தில் ரோபோ சங்கர் குறித்து போஸ்ட் போட்டிருக்கிறார்.

என் தந்தை மாமா: அவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில், "எல்லோருக்கும் தாய் மாமா இருப்பார்கள் எனக்கு நீ "என் தந்தை மாமா". ஒரு தந்தையாகவும், நண்பனாகவும், மாமனாராக இருந்தீர்கள்.. இனிமேல் நீயே என் தெய்வம் எங்கள் குடும்பத்தின் சிரிப்புத் தூண் இன்று இல்லையே... நிறைய ஓடி சோர்ந்து விட்டாய், இனி நிம்மதியாக உறங்குங்கள்..." என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனை பார்த்து பலரும் கார்த்திக்கிற்கு தங்களது ஆறுதலை தெரிவிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X