twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ‘ராக்கெட்ரி’ படத்திற்காக சூர்யா, ஷாருக்கான் செய்த செயல்.. நெகிழ்ந்த மாதவன் !

    |

    சென்னை : 'ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட் ' திரைப்படத்தில் நடிக்க சூர்யா மற்றும் ஷாருக்கான் சம்பளமே வாங்கவில்லை என மாதவன் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

    இத்திரைப்படத்தில் நடித்தது மட்டுமில்லாமல் இயக்குநராகவும் மாறி நீண்டநாள் கனவை நிறைவேற்றி உள்ளார் மாதவன்.

    இதில், சிம்ரன், ரஜித் கபூர், ரவி ராகவேந்திரா, மிஷா கோஷல், குல்ஷன் குரோவர், கார்த்திக் குமார் மற்றும் தினேஷ் பிரபாகர் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

    விஜய்க்கு போன் போட்டு வாழ்த்திய கமல்.. தளபதி 67லும் விக்ரம் கனெக்‌ஷன் இருக்கும் போல தெரியுதே! விஜய்க்கு போன் போட்டு வாழ்த்திய கமல்.. தளபதி 67லும் விக்ரம் கனெக்‌ஷன் இருக்கும் போல தெரியுதே!

    ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட்

    ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட்

    'ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட் ' திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் பேசிய மாதவன், செய்தியாளர் கேட்ட பல கேள்விக்கு இஸ்ரோ விஞ்ஞானி போலவே பதிலளித்தார். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் சாதனை உலகத்திற்கு இதுவரை தெரியாது எனக்குள் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. இதனால் இந்தபடத்தை வெறித்தனமா எடுத்ததாக கூறியுள்ளார்.

    சம்பளம் வாங்கவில்லை

    சம்பளம் வாங்கவில்லை

    இந்த திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகர் சூர்யா நடித்துள்ளனர். சூர்யா, ஷாருக்கான் இருவரும் படத்திற்கு எந்த சம்பளமும் வாங்கவில்லை. கேரவன்கள், உடைகள் மற்றும் உதவியாளர்களுக்காக கூட அவர்கள் சம்பளம் வாங்கவில்லை. மும்பையில் படப்பிடிப்பு நடந்த போது சூர்யா தனது சொந்த செலவில் விமானத்தில் வந்தார்.அதற்காக விமான கட்டணத்தை கூட அவர் வாங்கவில்லை. திரையுலகில் நிறைய நல்லவர்கள் இருக்கிறார்கள்.

    ஜூலை 1ந் தேதி ரிலீஸ்

    ஜூலை 1ந் தேதி ரிலீஸ்

    ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் திரைப்படம் ஜூலை 1ந் தேதி அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. ஒரே நேரத்தில் இந்தி, தமிழ், ஆங்கில மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளிலும் வெளியாகிறது. இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

    வாழ்க்கை வரலாறு

    வாழ்க்கை வரலாறு

    இஸ்ரோவில் பணியாற்றிய விண்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை முதலில் ஆனந்த் மகாதேவன் இயக்கிய நிலையில், அவர் படத்திலிருந்து விலகினார். இதையடுத்தே, நடிகர் மாதவன் இப்படத்தை இயக்கினார்.

    6 மொழிகளில்

    6 மொழிகளில்

    6 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை டிரிகலர் பிலிம்ஸ், வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் 27 இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. சிம்ரன், மாதவனின் மனைவியாக நடித்துள்ளார். ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா, ஸ்காட்லாந்து, பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் படமாக்கப்பட்டது.

    English summary
    Madhavan’s film Rocketry: The Nambi Effect is slated to release on July 1.Suriya and Shah Rukh did not charge fees worked for free.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X