யாஷின் கே.ஜி.எஃப் சேப்டர்-2… முக்கிய அறிவிப்பு வெளியானது !
சென்னை : கே.ஜி.எஃப் சேப்டர் 2 குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி வைரலாகி வருகிறது.
இத்திரைப்படம் ஜூலை 16ந் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் தமிழ் ரிலீஸ் உரிமையை டிரீம் வாரிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
சுமார் 120 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி உள்ள இப்படத்திற்கு ரசிகர்களிடன் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மாபெரும் வெற்றி
கன்னடத்தில் இயக்கப்பட்டு, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என ஒரே நேரத்தில் ஐந்து மொழிகளில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் கே.ஜி.எஃப். இதன் வெற்றியை தொடர்ந்து அடுத்த பாகமான கே.ஜி.எஃப் 2 தயாராகி உள்ளது.

முன்னணி நடிகர்கள்
இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

5 மொழிகளில்
கே.ஜி.எஃப் திரைப்படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்ததை அடுத்து, அதன் இரண்டாம் பாகத்துக்கும் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதுவும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி எனப் பல மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியாகவுள்ளது.

பல கோடி பார்வையாளர்கள்
கேஜிஎப் 2ன் நாயகன் யாஷின் பிறந்த நாள் அன்று கே.ஜி.எஃப் 2 டீஸர் வெளியாகி வைரலானது. பல கோடி பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது. சேப்டர்2 ஜூலை 16ந் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

யாஷ் சிறப்பாக
இந்நிலையில் இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டதாகவும், டப்பிங் வேகைள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் இதில் யாஷ் சிறப்பாக டப்பிங் பேசி உள்ளதாகவும் இப்படத்தின் இயக்குனர்பிரசாந்த் நீல் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











