ராக்ஸ்டார் வெளியிடும் ராக்கி டீசரின் மூன்றாம் பாகம்! ரசிகர்கள் மரண வெய்ட்டிங்

சென்னை: ராமின் இயக்கத்தில் வெளியான தரமணி திரைப்படத்திற்கு பிறகு நடிகர் வசந்த் ரவி ராக்கி படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் இயக்குனர் பாரதி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.

விக்னேஷ் சிவன் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் இந்த படத்தை வழங்குகிறது. டார்புக்கா சிவா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இந்த படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரனுக்கு ராக்கி திரைப்படம் தான் முதல் படம். இதையடுத்து இயக்குனர் செல்வராகவனை கதாநாயகனாக வைத்து சாணிக் காகிதம் என்னும் படத்தையும் இயக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தரமான படைப்பு

தரமான படைப்பு

ஏ. ஆர். முருகதாஸ் வெளியிட்டார். யாரும் எதிர்பாக்காத வகையில் பயங்கரமான ட்ரைலராக அமைந்தது. வசந்த் ரவி, பாரதி ராஜாவின் ஸ்கிரீன் பிரசன்ஸ் பலராலும் பாராட்டப்பட்டு ராக்கி தரமான படைப்பாக இருக்கும் என ரசிகர்களுக்கு நம்பிக்கையளித்தது.

ரத்தம் தெறிக்க

ரத்தம் தெறிக்க

ராக்கி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் , ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து சமீபத்தில் ராக்கி படத்தின் டீசர் வெளியானது. குடலை உருவி மாலையாக போடுவது போன்ற ரத்தம் தெறிக்கும் காட்சிகள் டீசரில் இடம்பெற்று அனைவரையும் கொலை நடுங்க வைத்தது.

இன்று 11 மணிக்கு

இன்று 11 மணிக்கு

இதையடுத்து ராக்கி படத்தின் "டீசர் பாகம் 3 - நாட்டுக்கு போகலாம் "ஐ , இசையமைப்பாளர் ராக் ஸ்டார் அனிருத் இன்று காலை 11மணிக்கு வெளியிட உள்ளார். ட்ரைலர், டீசர் என அனைத்தும் பட்டையை கிளப்பி உள்ள நிலையில் டீசர் பாகம் 3ன் மேல் ரசிகர்கள் எதிர்பார்ப்பின் உச்சத்தில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X