Rocky Bhai Yash - ராக்கி பாயுடன் செம ஆட்டம் போட்ட ராஜமாதா ரம்யா கிருஷ்ணன் - ட்ரெண்டிங் வீடியோ

சென்னை: Rocky Bhai (ராக்கி பாய்) ராக்கி பாய் யஷ்ஷுடன் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தவர் அம்பரீஷ். இவர் 1972ஆம் ஆண்டு திரையுலகில் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு பல நூறு படங்களில் நடித்தவர் அரசியலில் என்ட்ரி ஆனார். அதன்படி அவர் மக்களவை உறுப்பினராகவும், கர்நாடக மாநிலத்தின் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சராகவும் திகழ்ந்தார். அம்பரீஷ் கடந்த 2018ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவருக்கு சுமலதா என்ற மனைவியும், அபிஷேக் என்ற மகனும் இருக்கிறார்கள். சுமலதா இப்போது மண்டியா தொகுதி எம்.பி என்பது குறிப்பிடத்தக்கது.

Rocky Bhai Yash and Ramya Krishnan Dancing video trendin on social media

அம்பரீஷ் மகன்: அம்பரீஷ் மகனான அபிஷேக் அமர் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர். இவருக்கும் மாடல் அழகி அவிவா பிடப்பாவுக்கும் பெங்களூரில் இருக்கும் பேலஸ் கிரவுண்ட்ஸில் சில நாள்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. மிக பிரமாண்டமாக நடந்த அந்தத் திருமணத்தில் கன்னட திரையுலகத்தின் தற்போதைய சென்சேஷனல் ஹீரோவான யஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாட்டு பிரபலங்கள்: தமிழ்நாட்டிலிருந்து அம்பரீஷின் நெருங்கிய நண்பரான ரஜினிகாந்த்தும் அபிஷேக்கின் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். ரஜினிகாந்த் தவிர நடிகையும் மணிரத்னத்தின் மனைவியுமான சுஹாசினி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, நடிகை ரம்யா கிருஷ்ணன் முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். மேலும் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் மனைவியான அஸ்வினியும் இந்தத் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

நடனம்: இந்நிலையில் திருமணத்தில் கலந்துகொண்டவர்களில் நடிகர் யஷ்ஷும் நடிகை ரம்யா கிருஷ்ணனும் கன்னட பாடல் ஒன்றுக்கு உற்சாகமாக நடனமாடினர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இப்போது இணையத்தில் லீக்காகி ட்ரெண்டாகியுள்ளது. வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் யஷ்ஷின் நடன அசைவுகளை வெகுவாக பாராட்டிவருகின்றனர்.மேலும் ரம்யாகிருஷ்ணனின் நடனத்தை வெகுவாக பாராட்டிவருகின்றனர்.

Rocky Bhai Yash and Ramya Krishnan Dancing video trendin on social media

ராக்கிபாய்: நடிகர் யஷ் கன்னட திரையுலகில் தனக்கென இடத்தை பிடிக்க பல வருடங்கள் போராடியவர். அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது கேஜிஎஃப் படம். அதன் முதல் பாகம் மெகா வெற்றி பெற யஷ் ராக்கி பாய் என ரசிகர்களால் அழைக்கப்பட்டார். அதேபோல் அதன் இரண்டாம் பாகமும் வெளியாகி இந்திய அளவில் வசூலை வாரி குவித்தது. குறிப்பாக உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை அள்ளியது. இதனால் அவர் பான் இந்தியா ஹீரோவாக மாறிவிட்டார்.

ரம்யா கிருஷ்ணன்: ரம்யா கிருஷ்ணன் தமிழின் மூத்த நடிகை ஆவார். கதாநாயகி, கேரக்டர் ஆர்ட்டிஸ்ட், வில்லி என நடித்தவர் பாகுபலி படத்தில் ராஜமாதா கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். அந்தக் கதாபாத்திரத்தில் அவரது நடிப்பை பார்த்த ரசிகர்கள் அவரை ராஜமாதா என்று அழைப்பதையே வழக்கமாக வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X