கொலை நடுங்கும்..ரத்தத்தை உறைய வைக்கும்.. மிரட்டும் ராக்கி டீசர்!

சென்னை : தரமணி திரைப்படத்திற்கு பிறகு நடிகர் வசந்த் ரவி நடித்திருக்கும் ராக்கி திரைப்படத்தின் டீசர் இப்பொழுது வெளியாகியுள்ளது.

Recommended Video

சென்னை: ரத்தம் சொட்ட, சொட்ட ராக்கி டீசர்.. குடலை மாலையாக போடும் ஹீரோ.. கதறும் பாரதிராஜா..!

அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கும் இந்த திரைப்படம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போதே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

விக்னேஷ் சிவன் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் வழங்கும் இந்த திரைப்படத்தின் மிரட்டலான டீசர் இப்பொழுது வெளியாகி அனைவரையும் கொலை நடுங்க வைத்துள்ளது.

முக்கியமான கதாபாத்திரத்தில்

முக்கியமான கதாபாத்திரத்தில்

அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கும் ராக்கி திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கின்ற நிலையில் இந்த திரைப்படத்தில் தரமணி புகழ் வசந்த் ரவி கதாநாயகனாக நடித்திருக்க முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குனர் பாரதிராஜா நடித்திருக்கிறார்.

கொலை நடுங்க வைத்துள்ளது

கொலை நடுங்க வைத்துள்ளது

ராக்கி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது முதலே இந்த திரைப்படத்தின் மீதான ஈர்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துக்கொண்டே போக இப்பொழுது இதன் டீசர் வெளியாகி அனைவரையும் கொலை நடுங்க வைத்துள்ளது.

நெஜமாவே செய்வான்

நெஜமாவே செய்வான்

"நாம சண்டை போடுறப்போ சும்மா சொல்லுவோம்ல.. குடல உருவி மாலையா போட்ருவோம்னு..அதை நெஜமாவே செய்வான்.. மணிமாறன் புள்ளையோட குடல உருவி மாலையா போட்டான்டா அவன்".. என ஆரம்பத்திலேயே ரத்தமும் சதையுமாக வசனம் ஆரம்பித்து முடிந்த உடனேயே ஹீரோ ஒருவரின் குடலை நிஜமாகவே உருவி எடுத்து மாலையாக போடுகிறார் அதைப்பார்த்து பாரதிராஜா கதறுகிறார்.

செல்வராகவன் கதாநாயகனாக

செல்வராகவன் கதாநாயகனாக

தமிழில் இதுவரை கண்டிராத அளவிற்கு ரத்தம் சொட்ட சொட்ட கொலைவெறியோடு வெளியாகி இருக்கும் ராக்கி படத்தின் டீசர் பார்க்கும் அனைவரையும் மிரட்டி வரும் நிலையில் முதல் திரைப்படத்திலேயே மிரட்டி இருக்கும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தனது இரண்டாவது திரைப்படத்தில் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க சாணிக் காகிதம் திரைப்படத்தை இயக்குகிறார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.

ரவுடி பிக்சர்ஸ்

ரவுடி பிக்சர்ஸ்

கௌதம் மேனன் தயாரிப்பில் உருவாகி இருந்த ராக்கி திரைப்படம் சில பொருளாதார பிரச்சினை காரணமாக பல மாதங்களாக வெளியாகாமல் இருந்த நிலையில் இதனை நயன்தாரா விக்னேஷ் சிவனின் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் வழங்குகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X