பொள்ளாச்சி சம்பவத்தால் உணர்ச்சிவசப்பட்டு 'இப்படி' சொல்கிறீர்களா ரோகிணி?
Recommended Video

சென்னை: பொள்ளாச்சி சம்பம் பற்றி அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் நிலையில் நடிகை ரோகிணி இயக்குநர்களுக்கு முக்கிய கோரிக்கை விடுத்துள்ளார்.
பொள்ளாச்சி பயங்கரம் குறித்து கண்டனம் தெரிவித்த திரையுலகினரை சிலர் விளாசியுள்ளனர். படங்களில் பெண்களை போதைப் பொருளாக காட்டும் நீங்கள் நிஜத்தில் நடிக்க வேண்டாம் என்று விளாசியுள்ளனர்.
இந்நிலையில் தான் நடிகை ரோகிணி இயக்குநர்களிடம் ஒரு முக்கிய கோரிக்கை விடுத்துள்ளார்.
ரோகிணி
இயக்குநர் நண்பர்களுக்கு ஒரு கோரிக்கை...ஒரு பெண்ணின் உடலை கமர்ஷியல் பொருளாக்காதீர்கள்..பெண்களை எப்படி நடத்த வேண்டும் என்று காட்டுங்கள். பெண்களை பார்க்கும் விதத்தை மாற்றுவோம் என்று ட்வீட் செய்துள்ளார் ரோகிணி.

நடக்குமா?
ரோகிணி எளிதாக கோரிக்கை விடுத்துவிட்டார். ஆனால் இதெல்லாம் நடக்கிற காரியமா?. பெண்களை படங்களில் கவர்ச்சி காட்டி நடிப்பதை முதலில் நிறுத்தச் சொல்லுங்கள் என்று பலரும் தெரிவித்துள்ளனர். கவர்ச்சி காட்ட மறுக்கும் நடிகையின் மார்க்கெட் உடனே சரிந்துவிடும். அதனால் உங்களின் கோரிக்கை நிறைவேறுவது ரொம்ப கஷ்டம் என்கிறார்கள் ரசிகர்கள்.

மார்க்கெட்
நீங்களே ஆசை அதிகம் வச்சு பாடலுக்கு அரைகுறை ஆடையில் ஆட்டம் போட்டவர் தானே. தற்போது மார்க்கெட் இல்லை என்பதால் நல்லவர் போன்று பேச வேண்டாம் என்று ரோகிணியை சிலர் விளாசியுள்ளனர்.
உடம்பு
தற்போது உள்ள நடிகைகளில் பெரும்பாலானோர் நடிப்பு என்பது என்னவென்று தெரியாமல் உடம்பை நம்பித் தான் உள்ளனர். அவர்கள் எப்படி கவர்ச்சி காட்டாமல் நடிப்பார்கள் ரோகிணி மேடம் என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











