சூர்யாவுக்கு எதிராக வன்மத்தை தூண்டுவதாக… நடிகை ரோகிணி கண்டனம் !

சென்னை : நடிகர் சூர்யாவை தாக்கினால் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் பேசியதற்கு நடிகை ரோகிணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா நடிப்பில் நவம்பர் 2ந் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ஜெய் பீம்.

பழங்குடியினரின் வாழ்வியல் துன்பங்களை கண் முன்னே கொண்டு வந்திருக்கும் இத்திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது.

ஜெய் பீம்

ஜெய் பீம்

நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் ஜெய் பீம். பழங்குடியின மக்கள் குறிப்பாக, இருளர் மக்கள் பற்றி பேசும் இப்படம் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. பழங்முடியின மக்களின் இன்னல்களை மிகவும் தத்ரூபமாக காட்டியுள்ள இயக்குனருக்கும், பெரிய நடிகர்கள் துணிந்து நடிக்காத படத்தில் சூர்யா யதார்த்தமாக நடித்திருப்பதும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

வன்னியர் அமைப்பு கண்டனம்

வன்னியர் அமைப்பு கண்டனம்

ஜெய்பீம் திரைப்படத்திற்கு கடந்த சில நாட்களாக வன்னியர் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என்பதும் பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி அவர்கள் இந்த படத்தின் ஒரு சில காட்சிகளுக்கு கண்டனம் தெரிவித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார் என்பதும் இந்த அறிக்கைக்கு சூர்யா பதில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

ரூ 10 லட்சம் பரிசு

ரூ 10 லட்சம் பரிசு

சூர்யா மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தால் அவரை தாக்கும் இளைஞர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என பாமக மாவட்ட செயலாளர் அறிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்பீம் திரைப்படத்தில் மறைந்த பாமக பிரமுகர் காடுவெட்டி குருவின் பெயரை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டிய மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பழனிசாமி அவர்கள் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

கண்டிக்கிறேன்

கண்டிக்கிறேன்

இந்நிலையில், நடிகர் சூர்யாவை தாக்கினால் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என பாமக மாவட்ட செயலாளர் பேசியதற்கு நடிகை ரோகிணி தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், சக நடிகர் சூர்யாவுக்கு எதிராக மயிலாடுதுறை மாவட்ட பாமக செயலாளர் பேசியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. பாமக தலைவர் சுட்டிகாட்டியதற்காக நாளேட்டில் வந்த படத்தை மாற்றியுள்ளார்.கருத்தை கருத்தாகக் கொண்டு எதிர்கொள்ளாமல், சூர்யாவுக்கு எதிராக வன்மத்தை தூண்டுவதை நான் கண்டிக்கிறேன். என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X