Leo: ரோகிணி, ஏஜிஎஸ் தியேட்டர்களில் தொடரும் சிக்கல்.. லியோ டிக்கெட் புக்கிங் தொடங்காதது ஏன்?

சென்னை: Leo Ticket booking issue - ஃபேன்ஸ் ஃபோர்ட் என சொல்லப்படும் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி தியேட்டர், ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனத்தின் ஏஜிஎஸ் சினிமாஸ் உள்ளிட்ட பல திரையரங்குகள் இன்னமும் லியோ படத்திற்கான முதல் நாள் டிக்கெட் புக்கிங்கை ஆரம்பிக்கவே இல்லை.

பிவிஆர் - ஐநாக்ஸ் மல்டிபிளக்ஸ்களில் லியோ படத்துக்கான ஷேர் அக்ரீமென்ட் உறுதி செய்யப்பட்ட நிலையில், டிக்கெட் புக்கிங் தொடங்கி ஹவுஸ்ஃபுல்லாக மாறிவிட்டன.

Rohini theater and AGS Archana Kalpathi reveals why they still star Leo ticket booking

ஆனால், இன்னமும் ஏன் டிக்கெட் புக்கிங்கை தொடங்கவில்லை என்பதற்கு ரோகிணி தியேட்டர் உரிமையாளர் ரேவந்த் சரண் மற்றும் ஏஜிஎஸ் தியேட்டரின் உரிமையாளர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோர் தற்போது விளக்கம் கொடுத்துள்ளனர்.

தொடரும் சிக்கல்: லியோ டிக்கெட் புக்கிங் சென்னையில் இன்னமும் பல முன்னணி தியேட்டர்களில் டிக்கெட் புக்கிங்கை ஆரம்பிக்கவில்லை. இன்று மாலை 6 மணிக்கு மேல் தான் முடிவு எட்டப்பட்டு டிக்கெட் புக்கிங் தொடங்கப்படும் என்கிற அதிர்ச்சி தகவல்களும் தற்போது வெளியாகி உள்ளன.

ஒரு பக்கம் ஹவுஸ்ஃபுல்: ஒரு பக்கம் சென்னையில் உள்ள முக்கிய திரையரங்குகள் இன்னமும் டிக்கெட் முன்பதிவை தொடங்காத நிலையில், இன்னொரு பக்கம் பிவிஆர் உள்ளிட்ட மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் டிக்கெட் புக்கிங் தொடங்கி சில மணி நேரங்களில் ஒட்டுமொத்த டிக்கெட்டுகளும் விற்பனையாகி ஹவுஸ்ஃபுல் ஆகிவிட்டன.

அர்ச்சனா கல்பாத்தி ட்வீட்: இந்த பிரச்சனைக்கு என்ன காரணம் என்பதற்கு ஏஜிஎஸ் சினிமாஸை சேர்ந்த அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில், விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் ஓனர்கள் இடையேயான ஒப்பந்தம் இன்னுமும் கையெழுத்திடப்படாத நிலையில் தான் லியோ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கவில்லை என்றும் இன்று மாலை 6:00 மணிக்கு அனைத்தும் சால்வாகி டிக்கெட் புக்கிங் ஆரம்பிக்கும் என கூறியுள்ளார்.

ரோகிணி தியேட்டர் ஓனர்: அதைப்போல ரோகிணி தியேட்டரை சேர்ந்த ரேவந்த் சரண் அவரும் சொல்லி வைத்தார் போல அதே பதிலை சொல்லி விஜய் ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளார். நாளை மறுநாள் லியோ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், இன்னமும் டிக்கெட் புக்கிங் முன்பதிவு தொடங்காமல் இருப்பது சரியல்ல என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X