மகனுடன் மோதுகிறாரா விஜய்?.. ஜன நாயகன் டிக்கெட் புக்கிங் அறிவிப்பை வெளியிட்ட ரோகிணி தியேட்டர்!
சென்னை: விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் கடந்த மாதம் விஜய் பிறந்தநாளை முன்னிட்டே வெளியாகி விடும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், அந்த படத்துக்கு இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை.
ஆனால், தணிக்கைக் குழு பார்த்துவிட்டதாகவும் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதாகவும் ஏகப்பட்ட தகவல்கள் வெளியான நிலையில், அவை முற்றிலும் பொய் என தணிக்கை குழு பதறியடித்து ட்வீட் போட்டு வருகிறது.

ஜன நாயகன் படத்துக்கு சென்சார் சான்றிதழ் விரைவில் கிடைத்து விடும் என்றும் படம் இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என்கின்றனர். விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள சிக்மா படமும் இம்மாத இறுதியில் வெளியாக உள்ள நிலையில், மகன் படத்துடன் மோதப் போகிறாரா முதலமைச்சர் விஜய் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
ஜன நாயகன் சென்சார் எப்போ?: ஜன நாயகன் படத்தை தணிக்கை குழு பார்த்து விட்டதாகவும் 13 கட்கள் செய்யச் சொல்லியதாகவும் ஏகப்பட்ட மீடியாக்களே தவறான தகவலை வெளியிட தொடங்கிய நிலையில், CBFCன் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் இது முழுக்க முழுக்க பொய்யான செய்தி என அறிவித்துள்ளனர். இந்நிலையில், ஜன நாயகன் படத்துக்கு இதுவரை சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது. இந்நிலையில், படம் எதிர்பார்த்தபடி இந்த மாதம் வெளியாகுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

ரோகிணி தியேட்டர் ட்வீட்: ஜன நாயகன் திரைப்படம் விரைவில் லோடிங் என ரோகிணி தியேட்டர் எக்ஸ் பக்கத்திலே பதிவிட்டுள்ளனர். கூடிய விரைவில் படத்துக்கான டிக்கெட் புக்கிங் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் திங்கட்கிழமைக்குள் சென்சார் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஆனால், இதுவரை கேவிஎன் நிறுவனம் மற்றும் தணிக்கை வாரியம் ஜன நாயகன் சென்சார் சான்றிதழ் பற்றிய எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.
அச்சத்தில் மற்ற தயாரிப்பாளர்கள்: ஜூலை 10ம் தேதி இதயம் முரளி உள்ளிட்ட சில படங்கள் வெளியாக காத்திருக்கின்றன. ஜூலை 17ம் தேதி அன்பே டயானா, ஜி.டி. நாயுடு உள்ளிட்ட படங்கள் வெளியாக காத்திருக்கின்றன. ஜூலை 30ம் தேதி விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடித்துள்ள சிக்மா மற்றும் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடித்துள்ள டிசி உள்ளிட்ட படங்கள் ரிலீஸுக்கு திட்டமிட்டுள்ள நிலையில், ஜன நாயகன் ரிலீஸ் எந்த தேதியில் வரும் என்றும் எந்த எந்த படங்கள் பின் வாங்கும் என்கிற நிலைமை உள்ளதால் பல தயாரிப்பாளர்கள் அச்சத்தில் உள்ளதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications