ரோகிணி திரையரங்கம் மீது க்ரைம் ரேட் கூடிட்டே போகுதே - இந்தமுறை என்ன தெரியுமா?

சென்னை: Rohini Theatre Issue (ரோகிணி தியேட்டர் விவகாரம்) ரோகிணி திரையரங்கம் 2022-2023ஆம் நிதியாண்டிற்கான சொத்து வரி 3.69 லட்சம் ரூபாய் கட்டாமல் இருப்பது தெரியவந்திருக்கிறது.

பத்து தல படத்துக்கு டிக்கெட் எடுத்து பார்க்க வந்த நரிக்குறவர் இன மக்களை உள்ளே விடாத ரோகிணி திரையரங்கம்தான் நேற்றிலிருந்து ஹாட் டாபிக். பலரும் அந்தத் திரையரங்கத்துக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்துவருகின்றனர். மேலும், #BoycottRohinitheatre என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டானது.

பிரபலமான திரையரங்கம்

பிரபலமான திரையரங்கம்

சென்னையில் இருக்கும் பிரபலமான திரையரங்குகளில் ஒன்று ரோகிணி திரையரங்கம். எந்த பெரிய ஹீரோவின் படம் வந்தாலும் இதில் நிச்சயம் திரையிடப்படும். அதுமட்டுமின்றி முதல் நாள் முதல் காட்சி பார்க்க அவ்வப்போது திரையுலக பிரபலங்களும் இந்தத் திரையரங்குக்கு வந்து செல்வார்கள். சென்னை கோயம்பேடு அருகே இந்தத் தியேட்டர் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ரோகிணி தியேட்டரில் பத்து தல

ரோகிணி தியேட்டரில் பத்து தல

இந்நிலையில் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்த பத்து தல படம் ரோகிணி திரையரங்கில் நேற்று வெளியானது. 8 மணி காட்சி காண்பதற்கு ரசிகர்கள் டிக்கெட் எடுத்து தியேட்டருக்குள் சென்றனர். அப்போது நரிக்குறவர் இனத்தை சேர்ந்த பெண்கள் இரண்டு பேரும், ஒரு சிறுவனும் டிக்கெட் எடுத்துக்கொண்டு தியேட்டருக்குள் செல்ல முயன்றனர்.

சர்ச்சையில் சிக்கிய ரோகிணி

சர்ச்சையில் சிக்கிய ரோகிணி

அப்போது டிக்கெட்டை பரிசோதிக்கும் ஊழியர் ஒருவர் அவர்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினார். கையில் டிக்கெட் இருக்கும்போது ஏன் அவர்களை உள்ளே விட மறுப்பு தெரிவிக்கிறீர்கள் என அங்கிருந்த இளம் பத்திரிகையாளர் கேட்டும் அந்த ஊழியர் அவர்களை உள்ளே விடவில்லை. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை கிளப்பியது. மேலும், ரோகிணி திரையரங்கத்துக்கு பலரும் கடுமையான கண்டனத்தை முன்வைத்தனர்.

ரோகிணி மேல் கூடும் க்ரைம் ரேட்

ரோகிணி மேல் கூடும் க்ரைம் ரேட்

இந்நிலையில் ரோகிணி திரையரங்கம் மற்றொரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. அதாவது, 2022-2023 நிதியாண்டில் மட்டும் அந்த திரையரங்க நிர்வாகமானது 3.69 லட்சம் ரூபாய் சொத்து வரி செலுத்தவில்லை என்றும் இதற்காக மாநகராட்சி 10000 ரூபாய் அபராதம் விதித்திருப்பதும் தெரியவந்திருக்கிறது. அதுமட்டுமின்றி கடந்த காலங்களில் நிலுவையிலிருக்கும் 24 லட்சம் ரூபாய் சொத்து வரி தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருப்பதும் தெரியவந்திருக்கிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் ரோகிணி திரையரங்கத்தின் அடுத்த தில்லாலங்கடி வேலை வெளிப்பட்டிருக்கிறது என்று கமெண்ட் செய்துவருகின்றனர்.

ரோகிணி திரையரங்கத்துக்கு கமல் கண்டனம்

ரோகிணி திரையரங்கத்துக்கு கமல் கண்டனம்

முன்னதாக, நரிக்குறவர்களை உள்ளே விடாத திரையரங்கத்தை கண்டித்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல் ஹாசன் பதிவு செய்திருக்கும் ட்வீடில், "டிக்கெட் இருந்தும் நாடோடிப் பழங்குடியினருக்குத் திரையரங்கத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சமூகவலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பிய பிறகே அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது" என குறிப்பிட்டிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X