வருது வருது பீஸ்ட்...ஃபேன்சுக்கு தான் ஃபீஸ்ட்...ரிலீசை கொண்டாட செம பாட்டு...குவியும் லைக்ஸ்
சென்னை : விஜய்யின் பீஸ்ட் பட ரிலீசை கொண்டாட ஸ்பெஷல் பாட்டே ரெடி பண்ணிருக்காங்க. இதை தயார் செய்து வெளியிட்டிருப்பது யார் என தெரிந்ததும் அனைவரும் அசந்து போய் உள்ளனர். விஜய் ரசிகர்கள் இந்த பாட்டை செம வைரலாக்கி வருகின்றனர்.
டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்னா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் படத்தின் டைட்டிலுடன் கடந்த ஜுலை மாதம் விஜய்யின் பிறந்த நாளன்று வெளியிடப்பட்டது.

அரபிக்குத்தின் தாறுமாறு ஹிட்
அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு காதலர் தின ஸ்பெஷலாக பீஸ்ட் ஃபஸ்ட் சிங்கிளாக அரபிக்குத்து வீடியோ லிரிக் பாடல் வெளியிடப்பட்டது. சிவகார்த்திகேயன் எழுதிய, அனிருத் இசையத்து பாடிய இந்த பாடல் தாறுமாறாக ஹிட் அடித்து வருகிறது. இதுவரை 175 மில்லியன் பார்வைகளை கடந்து விட்டது. தொடர்ந்து வ்யூஸ் அதிகரித்து வருகிறது.

எதுப்பா உண்மையான தகவல்
அரபிக்குத்து பாடல் மற்றும் அதன் சாதனையால் செம குஷியாகி உள்ளனர் ரசிகர்கள். இதனால் ரிலீஸ் தேதி எப்போ, அப்டேட் கொடுங்க என தொடர்ந்து சோஷியல் மீடியாவில் கேட்டு வருகின்றனர். மற்றொரு புறம் சினிமா வட்டாரங்கள் பீஸ்ட் படம் பற்றி பல்வேறு தகவல்களை சோஷியல் மீடியாவில் பரவ விட்டு வருகின்றன.

விரைவில் பீஸ்ட் ரிலீஸ் தேதியா
லேட்டஸ்ட் தகவலின், கொரோனா கட்டுப்பாடுகளால் பீஸ்ட் ஆடியோ வெளியீட்டு விழா நடத்தப்பட போவதில்லை. அதற்கு பதிலாக நேரடியாக ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிக்க போகிறார்களாம். ஏப்ரல் 13 ம் தேதி பீஸ்ட் ரிலீஸ் என்பது கிட்டதட்ட முடிவாகி விட்டதாம். விரைவில் ரிலீஸ் தேதியுடன் டீசர் வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரிலீசுக்கு ஸ்பெஷல் பாடலா
இந்நிலையில் பீஸ்ட் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதை உறுதிப்படுத்தும் விதமாக சென்னையில் உள்ள பிரபல தியேட்டர்களில் ஒன்றாக ரோகினி சில்வர் ஸ்க்ரீன் தியேட்டர் சார்பில் விஜய்யின் பீஸ்ட் வரவேற்கவும், கொண்டாடவும் ஸ்பெஷல் வீடியோ பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். வருது வருது பீஸ்ட்...ஃபேன்சுக்கு தான் ஃபீஸ்ட் என துவங்கும் இந்த பாடல் வெஸ்டர்ன் மற்றும் கானா கலந்ததாக அமைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











