Rohit Bal Passed Away: இந்திய ஃபேஷன் டிசைன் துறை புரட்சியாளர் ரோகித் பால் மறைவு.. FDCI இரங்கல்
டெல்லி: இந்திய ஆடை வடிவமைப்பில் புதிய சாகப்தத்தை புரட்சியை ஏற்படுத்திய ரோகித் பால் அவருடைய 63வது வயதில் மருத்துவ சிகிச்சையில் இருந்தபோது மாரடைப்பால் நேற்று அதாவது நவம்பர் 1ஆம் தேதி காலமானார். இவர் மறைவினை ஃபேஷன் டிசைனிங் கவுன்சில் ஆஃப் இந்தியா உறுதி செய்தது மட்டும் இல்லாமால், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, ரோகித் பாலுக்கு இறுதி மரியாதை செலுத்தும் வரை ஃபேஷன் டிசைனிங் கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பு உடன் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
ரோகித் பாலைப் பொறுத்தவரையில், இந்திய ஆடை வடிவமைப்புத் துறையில் இன்றைக்கு பல லட்சக்கணகான இளைஞர்கள் ஆர்வம் காட்ட முக்கியமான பங்காற்றியுள்ளார். இவரது அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் இவரே முன்நின்று உருவாக்கிய ஆடைகள் சில ஆயிரங்களில் இருந்து பல லட்சங்கள் வரை விற்பனைக்கு உள்ளது.

இவர் வணிக நோக்குடன் தான் நடத்தி வந்த சமூக வலைதளப்பக்கத்தினை, கிட்டத்தட்ட 50 ஆயிரம்பேர் பின் தொடருகின்றனர். திரைப்படங்களுக்கு ஆடை வடிவமைப்பது, மிகப்பெரிய பணக்காரர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப ஆடைகளை வடிவமைப்பது என இவரது ஆடை வடிவமைப்பு மேட்டுக்குடி மக்களிடம் தனி வரவேற்பைப் பெற்றது எனலாம்.
பட்டங்கள்: இந்தியாவில் எங்கு ஃபேஷன் டிசைனிங் ஷோ நடந்தாலும், அல்லது வெளிநாடுகளில் எங்கு ஃபேஷன் டிசைனிங் ஷோ நடந்தாலும் அங்கு ரோகித் பாலின் தாக்கம் இல்லாமல் இருக்காது. ஃபேஷன் டிசைனிங் கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ரோகித் பால். இவர் கடந்த 1986ஆம் ஆண்டு ஃபேஷன் டிசைனிங் துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். கடின உழைப்பு மற்றும் புதுப்புது வடிவமைப்புகளினால், 2001ஆம் ஆண்டு கிங் ஃபிஷர் ஃபேஷன் விருதினை வென்றார். அதன் பின்னர், 2006ஆம் ஆண்டு இந்திய ஃபேஷன் விருதுகளில் அந்த ஆண்டுக்கான சிறந்த வடிவமைப்பாளர் விருதினை வென்றார். 2012ஆம் ஆண்டு கிரான்ட் ஃபினாலே டிசைனர் என்ற மகுடத்தினை தனதாக்கியுள்ளார்.
மறைவு: 2001ஆம் ஆண்டில் இருந்து அவர் நேற்று இறக்கும் தருவாய்வரை அவர் இந்திய ஆடை வடிவமைப்புத் துறையில் மிகவும் முக்கியமான நபராக இருந்துள்ளார். உடல் நலக்கோளாறினால், கடந்த சில ஆண்டுகளாகவே அவதிப்பட்டு வந்த ரோகித் பால், தெற்கு டெல்லியில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிப்பட்டார். சிகிச்சை பெற்றுவந்த அவர், மாரடைப்பினால் உயிரிழந்தார். இவரது மறைவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரது உடலுக்கு இன்று இறுதி மரியாதைகள் செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.


Click it and Unblock the Notifications