திரைத் துளி

By Staff

சென்னை:


செக் மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகை ரோஜாவுக்கு வியாழக்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படுகிறது.

சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ராவிடம், நடிகை ரோஜா ரூ 5 லட்சம் கடன் வாங்கியிருந்தார். வாங்கிய கடனை போத்ரா திருப்பிக் கேட்டபோது,நடிகை ரோஜா ரூ 2 லட்சத்திற்கான செக்கைக் கொடுத்தார். வங்கியில் பணம் இல்லாமல் செக் திரும்பி வந்து விட்டது.

இதையடுத்து ரோஜா தன்னிடம் பணம் வாங்கிக்கொண்டு திருப்பித் தராமல் ஏமாற்றி விட்டார் என்று சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார் போத்ரா.

இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்ட்ரேட், நீதிமன்றம் கலையும் வரை ரோஜாவுக்கு சிறைத்தண்டனையும், ரூ 5000 அபராதமும் விதிப்பதாகத்தீர்ப்பளித்தார். இதையடுத்து, போத்ரா, ரோஜாவுக்கு அளிக்கப்பட்ட தண்டனை மிகவும் குறைவானது. இது பிற குற்றவாளிகளை ஊக்குவிப்பது போல் ஆகிவிடும்.

அதனால் ரோஜாவுக்கு அதிகபட்ச தண்டனை அளிக்க வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் வழக்குத் தொடர்ந்தார்.

இதை விசாரித்த நீதிபதி அக்பர் பாஷா கதிரி, ரோஜா மீது தொடரப்பட்ட வழக்கில் 21 ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறினார்.

More from Filmibeat

Read more about: chennai roja verdict
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X