திரைத் துளி
சென்னை:
நடிகை ரோஜா நடித்த லத்தி ஜார்ஜ் திரைப்படத்தை வெளியிடுவதற்கு ஒரு நபர் நீதிபதி அளித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமைஇடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
சினிமா படத்தயாரிப்பாளர் முகுந்த் சந்த் போத்ரா, நடிகை ரோஜா தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளில் நடித்து வெளிவரவுள்ள லத்தி ஜார்ஜ்படத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜெயசிம்ம பாபு மற்றும் கனகபிரகாசம் தலைமையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதிகள் அடங்கிய டிவிஷன் பென்ஞ்ச், லத்தி ஜார்ஜ் படத்தை வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதித்தும், இதற்கு 10நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நடிகை ரோஜாவுக்கும், ஸ்ரீ சத்ய சாய் ரோஜா மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளருக்கும் உத்தரவிட்டார்.
முன்னதாக, திரைப்படத் தயாரிப்பாளர் முகுந்த் சந்த் போத்ரா, படமெடுப்பதற்காக நடிகை ரோஜாவுக்கும், அவரது சகோதரர் கோதண்டராமரெட்டிக்கும் பல லட்ச ரூபாய் கடன் அளித்தார்.
ஆனால் படமும் எடுக்காமல், வாங்கிய கடனைத் திருப்பியும் கொடுக்காமல் ரோஜாவும், அவரது சகோதரரும் காலம் தாழ்த்தி வந்ததார்கள்.இதையடுத்து ரோஜா, முகுந்த் சந்த் போத்ராவுக்குக் கொடுத்த செக்கும் வங்கியில் பணமின்றி திரும்பி வந்து விட்டது.
இதையடுத்து ரோஜா தனக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்கக் கோரி, முகுந்த் சந்த் போத்ரா வழக்குத் தொடர்ந்தார். தற்போதுஅவருக்குக் கொடுக்க வேண்டிய பணம், வட்டியுடன் சேர்ந்து ரூ 70 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும் ரோஜா நடித்து வரும் படங்களின் சம்பளத்தைநீதிமன்றத்தில் கட்டக் கோரியும் போத்ரா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஒரு நபர் நீதிபதி ராமமூர்த்தி, ரோஜாவின் காதலரும், திரைப்பட இயக்குநருமான ஆர்.கே.செல்வமணியின் உத்தரவாதத்தைஏற்றுக் கொண்டு போத்ராவின் மனுவை தள்ளுபடி செய்தார். இதையடுத்து போத்ரா சென்னை உயர்நீதிமன்றத்தில் ரோஜாவின் படத்தை வெளியிடத் தடைவிதிக்கக் கோரி மீண்டும் வழக்குத் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.


Click it and Unblock the Notifications











