திரைத் துளி
சென்னை:
நடிகை ரோஜா, பைனான்சியரிடம் பணம் இல்லாத காசோலை கொடுத்து மோசடி செய்ததாக தொடரப்பட்டவழக்கின் அப்பீல் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
சென்னையைச் சேர்ந்த போத்ரா என்ற பைனான்சியருக்கு கொடுக்க வேண்டிய பணத்திற்கான காசோலையைநடிகை ரோஜா கொடுத்திருந்தார். ஆனால் வங்கியில் பணம் இல்லாததால், அந்த காசோலை திரும்பி வந்து விட்டது.இதையடுத்து போத்ரா சென்னை உயர்நீதிமன்ற்தில் வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கு விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை என்று கூறி ரோஜாவுக்கு ஒரு நாள் சிறைத்தண்டனைவிதிக்கப்பட்டது. இதை எதிர்த்து ரோஜா தரப்பில் அப்பீல் செய்யப்பட்டது. அப்பீல் மனுவை நீதிபதி மலைசுப்ரமணியம் விசாரித்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி, உயர்நீதிமன்ற கோடை விடுமுறைக்குப் பின் இதுகுறித்து தீர்ப்பு கொடுக்கப்படும்என்று அறிவித்தார்.
Comments


Click it and Unblock the Notifications