ஆந்திரத்து எம்ஜிஆர் ஆக மாறி வரும் ரோஜா!

Recommended Video

Actress Roja: ரோஜா செய்யும் காரியங்கள், ஆச்சிரியத்தில் மக்கள்- வீடியோ

சென்னை: ஆந்திராவில் எல்லோரும் என்டிஆர் போல அரசியலில் கலக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். நம்ம ரோஜாவுக்கும் அப்படி ஒரு ஆசை இருக்காதா என்ன. ஆனால் அவர் எம்ஜிஆர் ரேஞ்சுக்கு மக்களின் மனதில் அழுத்தமாக படிந்து வருகிறார்.

எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி என்ற உறுதியோடு சாதனை சிகரத்தை எட்டியிருக்கிறார் ரோஜா. திரைத் துறைக்குள் நுழைந்த பத்தே ஆண்டுகளில் 100 படங்களுக்குமேல் நடித்து சாதனைப் படைத்த புயல் பெண்மணி.

Roja attracts the people of AP

பெரிய திரையில் ரசிகர்களின் இதயத்துக்குள் சிம்மானசனமிட்டவர், தமிழ் மற்றும் தெலுங்கு என சின்னத் திரை நடிகையாகவும் ரசிகர்களின் இல்லத்துக்குள் நுழைந்தவர். தற்போது ஆந்திர அரசியலிலும் அசைக்கமுடியாத சக்தியாக உருவெடுத்து,. சுறுசுறுப்போடு சுழன்று வருகிறார்.

'அரசியலில் மட்டுமல்ல... குடும்பத் தலைவியாகவும் தனது கடமைகளில் சிறிதும் அவர் தவறியதில்லை.. குழந்தைகளை கவனிப்பதிலிருந்து, மிகச் சிறந்த தாய். அற்புதமான மரு'மகள்'.

Roja attracts the people of AP

நாங்கள் இருவருமே பொதுப் பணியில் ஈடுபடுவதால், வளர்ந்துவிட்ட எங்கள் பிள்ளைகளும் அதனைப் புரிந்து கொண்டு, பொறுப்போடு இருக்கிறார்கள் என்பதே பெருமை. குடும்பம், சமூகம் என அவரது உழைப்புக்கு 24 மணி நேரம் பத்தாது.' நலம் விசாரிப்பவர்களிடம் மனைவி ரோஜாவை பற்றி புகழாரம் சூட்டுகிறார் இயக்குநர் செல்வமணி.

Roja attracts the people of AP

சமீபத்தில் அவருடைய குழுவில் பணியாற்றிய ஒருவர், கடைசி நேரத்தில் தனது திருமண அழைப்பிதழை நீட்டியிருக்கிறார். குறிப்பிட்ட தினம் பெங்களூர் செல்ல வேண்டியிருந்தாலும், திருப்பதியிலிருந்து நேராக பட்டாபிராம் வந்து மணமக்களை வாழ்த்திவிட்டு, பெங்களூர் சென்றிருக்கிறார்.

Roja attracts the people of AP

பரபரப்பான வேலை பளுவிலும் எளிமையாய் நடந்த அந்த திருமணத்துக்கு வந்து வாழ்த்தியதை உறவுகள் மட்டுமின்றி ஊரே வியந்து போனது. தன் குழுவில் இருக்கும் கடைநிலை ஊழியர்களின் தேவைகளை பூர்த்தி செய்திலும் ரோஜாவுக்கு நிகர் இல்லை. 'ஆந்திராவில் ரோஜாம்மா பாதம் படாத கிராமமே இல்லீங்க... எங்க தேவைகளை கேட்டு தெரிஞ்சு, அதுக்கு நல்ல தீர்வை தருவாங்க. அந்த அம்மாதான் எங்க குலதெய்வம்' என்கிறார் சித்தூர் வாசியான ஹேமாவதி.

Roja attracts the people of AP

கிராமப் பெண்மணியாக திரைத்துரையில் கால் பதித்து, அரசியலில் அசைக்கமுடியாத சக்தியாக உருவெடுத்து, ஆந்திராவின் தொழில் வள‌ர்ச்சியை தீர்மாணிக்கும் ரோஜா, ஆந்திர‌ பாமர மக்களின் பவர்ஃபுல் பர்சனாலிட்டி என்பதே இன்றைய நிஜம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X