twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கதை நன்றாக இருந்தால் படம் ஓடும்...திருட்டு விசிடி பெரும் பிரச்சனை இல்லை - இயக்குநர் பாக்யராஜ்

    ரோஜாமாளிகை திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் கே பாக்யராஜ், இப்போது ரசிகர்கள் எந்த நடிகருடைய படம் என்று பார்ப்பதை விட, படத்தின் கதை நன்றாக உள்ளதா என்பதைத்தான் பார்க்கிறார்கள் என

    By Suganthi
    |

    சென்னை: கதை நன்றாக இருந்தால் படம் தானாக ஓடிவிடும். திருட்டு விசிடியால் வெறும் 10 சதவிதம் தான் பிரச்சனை என ரோஜா மாளிகை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ் கலந்துகொண்டு பேசினார்.

    புதுமுகம் அமரன் நாயகனாகவும் ஊர்வசி வத்ராஜ் நாயகியாகவும் நடிக்கும் ரோஜா மாளிகை திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் பாக்யராஜ், பொன்வண்ணன், நடிகர் விக்னேஷ் உள்ளிட்ட பல கலந்துகொண்டனர்.

    Roja maligai audio launch funtion

    இந்த படத்தை கௌதம் இயக்குகிறார். லியோ இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை ஆல்பத்தை வெளியிட்டு இயக்குநர் கே. பாக்யராஜ் பேசினார். அதில்,''திருட்டு விசிடியினால் 10 சதவிதம் தான் பாதிப்பு ஏற்படுகிறது. ஒரு படத்தின் கதை நன்றாக இருந்தால், அதுவே வாய்வழியான விளம்பரத்தால் நன்றாக ஓடிவிடும்.

    தற்போது மாநகரம், 8 தோட்டாக்கள் போன்ற படங்கள் நன்றாக இருக்கிறது என்ற படம் பார்த்தவர்கள் கூறுகிறார்கள். இந்த பேச்சால் படம் ஓடிவிடும். இப்போது ரசிகர்கள் எந்த நடிகர் படம் என்று பார்ப்பதில்லை. அது நல்ல கதையுள்ள திரைப்படமா என்றுதான் பார்க்கிறார்கள்'' என கூறினார்.

    திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் அமரன் கோயமுத்தூரைச் சேர்ந்தவர்கள் என்பதால் மேடை முழுக்க கோயமுத்தூரைச் சேர்ந்த திரை பிரபலங்களே அமர்ந்திருந்தனர்.

    English summary
    Roja maligai a new film's audio launched in Chennai. Debut hero Amaran and heroine Urvashi vatraj acting in this movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X