என் கணவருக்கு அந்த பிரச்சனை இருக்கு.. மனம் திறந்து பேசிய மதுபாலா !
சென்னை: ரோஜா பட நடிகை மதுபாலா தனது காதல் கணவர் குறித்து மனம் திறந்து பல விஷயத்தை பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கே பாலசந்தர் இயக்கத்தில் உருவான அழகன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் மதுபாலா.
இதையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக ரோஜா படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் மதுபாலாவிற்கு நல்ல பெயர் கிடைத்தது.

ஜென்டில்மேன்: முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார். பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவான ஜென்டில்மேன் திரைப்படம் இவரின் திரைவாழ்க்கைக்கு மேலும் தீனிப்போடும் படமாக இருந்தது.
ரீ எண்ட்ரி: இதையடுத்து, இருவர், மிஸ்டர் ரோமியோ, பஞ்சாலம்குறிச்சி எனஅடுத்தடுத்து படங்களில் நடித்துக்கொண்டிருந்த இவர், 1999ம் ஆண்டு ஆனந்த் ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டு பின் நடிப்பதை நிறுத்திவிட்டார். தற்போது மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கும் இவர், ஒரு சில படங்களை கை வசம் வைத்து இருக்கிறார். இவர் நடிப்பில் அண்மையில் ஸ்வீட் காரம் காபி என்ற வெப் தொடர் வெளியானது. அதில், மதுபாலா காவேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
காதல் கதை: இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள மதுபாலா, நான் திரைத்துறைக்குள் நுழையும்போது ஒரு நடிகரைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அப்போது தான் அவர்கள் நடிப்பு என்பது என் வேலை என்பதை புரிந்துகொள்வார்கள் என நினைத்தேன்.

எனக்கு உண்மையாக இருப்பார்: ஆனால், சினிமா எனக்கு சில அனுபவங்களை கற்றுக்கொடுத்தது, இதனால், ஒரு நடிகரை மட்டும் திருமணம் செய்யக்கூடாது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். அப்போது தான் ஆனந்த் என்னிடம் காதலை சொன்னார். அவருக்கு ஃபேண்டசியாக காதலிக்க தெரியாது. ஆனால் காதலுக்கும் எனக்கும் என்றும் உண்மையாக இருப்பார்.
காதல் போதும்: எங்களுக்குள் நடக்கும் ஒவ்வொரு சண்டையிலும் நான் எல்லை மீறி பேசினால், அதனை அவர் சரியாக புரிந்து கொள்வார். நான் எப்படி இருப்பேனோ அதேபோன்றுதான் அவரும். அவருக்கு முடி இல்லாதது அவருக்கு தாழ்வு மனப்பான்மையை இருந்தது. என்னிடம் காதலை சொல்லும்போதுகூட அவருக்கு முடி இல்லை. ஆனால் அது எனக்கு ஒரு பிரச்னையாக தெரியவில்லை என்று மதுபாலா தனது காதல் கணவர் குறித்து தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications