என்றும் என்றென்றும் மனதை மயக்கும் ஜோடி

மென்மையான காதல் கதைகள் , தேசப்பற்று மிக்க உணர்வுபூர்வமான கதைகள் எடுப்பதில் மணிரத்னம் என்ற ஒரு லெஜெண்ட் பல வித்யாசங்கள் காட்டி மக்கள் மனதை பல முறை வென்று இருக்கிறார்.
மணிரத்னம் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு அரவிந்த்சாமி, மதுபாலா நடிப்பில் வெளியான படம் ரோஜா. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று, அரவிந்தசாமி வாழ்க்கையில் மிக பெரிய ஒரு என்ட்ரி. மேலும் ரோஜா படம் மூலம்

Roja movie leads joining again
தான் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைப்பாளராகத் திரையுலகில் அறிமுகமானார் - இப்படி பல வரலாறு மிக்க அற்புதமான படம் . இந்த படத்தில் வரும் ரொமான்ஸ் காட்சிகள் இன்று வரை மிகவும் பிரபலம். மதுபாலா ஒரு பக்கம் அன்பு மழை பொழிய - அரவிந்தசாமி காதல் மழை பொழிய , ரெஹமான் இசை மழை சேர்த்து பரவசத்தின் உச்சம் என்றெ சொல்லலாம். ரோஜா படத்தின் பாடல்கள் இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. அதிலும் குறிப்பாக புது வெள்ளை மழை பாடல் இன்னும் பலரது பேவரிட் லிஸ்டில் முதல் இடத்தில் உள்ளது. அப்படி பட்ட லொகேஷன்ஸ் அப்படி பட்ட இசை - அற்புதமான கேமரா ஒர்க் .

இந்த ஜோடி மீண்டும் 27 வருடங்கள் கழித்து ஒரு புதிய படத்தில் இணையவுள்ளது என்பது ஆச்சரியமான உண்மை. இந்த முறை தமிழ் படத்தில் இல்லாமல் இந்தி படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த செய்தியை சமீபத்தில் பங்குபெற்ற பேட்டியில் மதுபாலா உறுதி செய்துள்ளார். கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும் இந்த ஜோடியை ஏதோ ஒரு மொழியில் மீண்டும் பார்க்க ஆசையாக தான் இருக்கிறது .

Roja movie leads joining again
ரோஜா படத்திற்கு பிறகு அவருடன் நடிப்பதில் ரொம்ப ஆவலாக இருக்கிறேன்' என்று மிகவும் சந்தோஷத்தில் கூறியுள்ளார், அதிகம் பேசப்பட்ட அரவிந்த் சாமி- மதுபாலா ஜோடி மீண்டும் இணையவுள்ளது அவர்களது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடிகர் ஜனகராஜ் நடித்திருப்பார். அவரும் மீண்டும் தமிழ் சினிமாவில் வர வேண்டும் ஒரு கலக்கு கலக்க வேண்டும் என்பது பலருடைய ஆசை.
Roja movie leads joining again

பழைய ஜோடி ஒன்று சேர்வது சினிமாவில் ஒன்றும் புதிதல்ல - ஏற்பட்ட கால இடைவெளி தான் புதிது.
வெற்றி பெற வாழ்த்துவோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X