பல்லை உடைப்பேன், உன் பல்லை உடைப்பேன்: டிவி நிகழ்ச்சியில் தயாரிப்பாளர், ரோஜா மோதல்
Recommended Video

ஹைதராபாத்: டிவி9 தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தின்போது நடிகை ரோஜா, தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாரிசு அரசியல் பற்றி டிவி 9 தொலைக்காட்சி சேனலில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை ரஜினிகாந்த் என்பவர் தொகுத்து வழங்கினார். நடிகர் பவன் கல்யாண் அரசியல் தலைவராக தகுதியானவரா என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
டோலிவுட் தயாரிப்பாளர் பந்த்லா கணேஷ் தனக்கு பிடித்த நடிகரான பவன் கல்யாணுக்கு ஆதரவாக பேசினார்.

பவன் கல்யாண்
செல்போன் மூலம் நடிகையும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ரோஜாவிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது அவர் பவன் கல்யாணை அவன், இவன் என்று மரியாதை இல்லாமல் பேசினார். இதை கேட்டு கோபம் அடைந்த கணேஷ் மரியாதையாக பேசுங்கள் என்றார்.

வாக்குவாதம்
நீங்கள் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸில் சேர்ந்த ராசி தான் ராஜசேகர ரெட்டி இறந்துவிட்டார். அதே கட்சியில் தொடர்ந்து இருங்கள். உங்கள் ராசி பற்றி நாட்டுக்கே தெரியும் என்று கணேஷ் ரோஜாவிடம் கூறினார்.

பதிலடி
கணேஷ் கூறியதை கேட்ட ரோஜா கடுப்பாகி அவரை முட்டாள் என்றதுடன் பல்லை உடைப்பேன் என்று மிரட்டினார். பதிலுக்கு கணேஷ் ரோஜாவை முட்டாள் உன் பல்லை நான் உடைப்பேன் என்றார்.

அரசியல்
வெட்கமாக இல்லையா, ஒரு எம்.எல்.ஏ. போன்றா நடக்கிறீர்கள், உங்களை மாதிரியா பவன் குறுக்கு வழியில் போனார், நேராக அரசியலுக்கு வந்துட்டீங்களாக்கும் என்று கணேஷ் ரோஜாவிடம் கேட்டார். இந்த நிகழ்ச்சியை பார்த்த மக்கள் இது என்னடா கூத்து என்று முகம் சுளித்தனர்.


Click it and Unblock the Notifications