முதல் இந்திய மாணவியாக சாதித்த ரோஜா மகள்.. எல்லாவற்றிற்கும் காரணம் ரோஜா இல்லையாம்.. வேற யாரு?

சென்னை: தென்னிந்திய திரையுலகில் வெற்றிகரமான அதே நேரத்தில் பலரும் பொறாமைப் படக்கூடிய அளவுக்கு இல்லற வாழ்க்கையில் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு பக்க பலமாக இருக்கும் நட்சத்திர தம்பதிகளில் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி - நடிகை ரோஜா தம்பதியர் மிகவும் முக்கியமானவர்கள். இவர்களின் மகள் அன்ஷுமாலிகா அமெரிக்காவின் புகழ்பெற்ற இந்தியானா பல்கலைக்கழகத்தில் (Indiana University Bloomington) கணினி அறிவியல் (Computer Science Honors) துறையில் இளங்கலை பட்டம் பெற்றார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

மேலும், இந்தியானா பல்கலைக்கழகத்தின் உயரிய விருதான 'ஹெர்மன் பி வெல்ஸ் டிஸ்டிங்குயிஷ்ட் சீனியர் அவார்டு' (Herman B Wells Distinguished Senior Award) இவருக்கு வழங்கப்பட்டது. இந்த கௌரவத்தைப் பெறும் முதல் இந்திய மாணவி அன்ஷுமாலிகா தான் என்பதுதான் கூடுதல் சிறப்பே. கல்வி மற்றும் தலைமைத்துவ பண்புகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டு அனுஷுமாலிகாவை கௌரவித்தனர். இதற்காக பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Roja s Daughter Anshu Malika Credits Father RK Selvamani for Historic Achievement as First Indian Award Recipient

இப்படி இருக்கையில் அனுஷு மாலிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தான் பட்டம் பெற்ற புகைப்படங்களை பகிர்ந்து, மிகவும் எமோஷனலாக ஒருவருக்கு நன்றி கூறி உள்ளார். அதாவது தனது அப்பாவான ஆர்.கே. செல்வமணி தான் தனது வெற்றிக்குப் பின்னால் இருந்த பலம், என்று தெரிவித்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில், தான் பட்டம் வாங்கிய கையோடு தனது தந்தையும் இயக்குநருமான ஆர்.கே. செல்வமணி உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து, மிகவும் எமோஷனலாக நன்றி தெரிவித்துள்ளார்.

ஆர்.கே. செல்வமணி: அவரது பதிவில், " அப்பா, எல்லாத்துக்கும் ரொம்ப நன்றி! நீங்க இல்லாம நான் கண்டிப்பா இங்க வரைக்கும் வந்திருக்கவே மாட்டேன். என் கனவுகளை பயமில்லாம துரத்துறதுக்கு பின்னாடி இருக்கிற மிகப்பெரிய பலமே நீங்க தான்.

எமோஷ்னல்: என் ஒவ்வொரு சாதனைக்கு பின்னாலும் உங்களோட தியாகமும், அன்பும், ஆதரவும் இருக்கு. சில நாட்கள்ல என் மேலேயே எனக்கு கோபம் வந்தப்பவும், என்னை முழுசா நம்புன ஒரே ஆள் நீங்க தான். 'அன்ஷு, உன்னால இதெல்லாம் சாதாரணமா பண்ண முடியும்'னு நீங்க சொல்ற அந்த ஒரு வார்த்தை தான் எனக்குள்ள பெரிய தைரியத்தை தந்துச்சு. நான் நினைச்சா எதையும் சாதிக்கலாம்னு என்னை நம்ப வச்சது உங்களோட அந்த வார்த்தைங்க தான்.

Roja s Daughter Anshu Malika Credits Father RK Selvamani for Historic Achievement as First Indian Award Recipient

பொறுப்பான அப்பா: உங்க பிள்ளையா பிறந்ததுக்கு நான் தினமும் கடமைப்பட்டிருக்கேன் அப்பா. லவ் யூ சோ மச்!" என்று மிகவும் எமோஷனலாக குறிப்பிட்டுள்ளார். இது தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் பலரும், ரோஜாவைப் பொறுத்தவரையில் ஆந்திரா அரசியலில் முழுக்க முழுக்க கவனம் செலுத்திவருகிறார். அப்படி இருக்கும்போது, குடும்பத்தையும் குழந்தைகளையும் ஒரு பொறுப்பான தகப்பனாக ஆர்.கே. செல்வமணி பாரமரித்தது பாராட்டுக்குரியது என்றும் பாராட்டி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X