அறுவை சிகிச்சைக்கு பிறகு மகளுடன் ரோஜா... வைரலாகும் ஃபோட்டோக்கள்
சென்னை : மார்ச் 24 ம் தேதி டைரக்டர் செல்வமணி, ஆடியோ மெசேஜ் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், தனது மனைவி ரோஜா செல்வமணிக்கு முக்கியமான பெரிய அறுவை சிகிச்சை நடந்தது உண்மை தான் என உறுதிப்படுத்தி இருந்தார். சென்னையில் தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். ரசிகர்கள் யாரும் நேரில் வர முயற்சிக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.
தற்போது ரோஜாவிற்கு அறுவை சிகிச்சை முடிந்து ஒரு மாதம் ஆன நிலையில், முதல் முறையாக ரோஜாவின் ஃபோட்டோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதுவும் தனது மகள் அன்சுமாலிகா செல்வமணி மற்றும் மகன் கிருஷ்ண லோஹித் செல்வமணி ஆகியோருடன் இருக்கும் ரோஜாவின் ஃபோட்டோக்கள் வெளியாகி உள்ளன.

இந்த ஃபோட்டோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. நடிகையும் எம்எல்ஏ.,வுமான ரோஜா நலமுடனும், ஆரோக்கியத்துடனும் உள்ளதை கண்ட அவரது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
ஆந்திராவின் நகரி தொகுதியில் இரண்டாவது முறையாக எம்எல்ஏ.,வாக இருந்து வருகிறார் ரோஜா. அந்த தொகுதி மக்களிடம் ரோஜா மிகவும் பிரபலம். தற்போது ஆக்டிவாக இருக்கும் அரசியல்வாதிகளில் முன்னணியில் இருப்பவர் ரோஜா.
அறுவை சிகிச்சைக்கு பிறகு தனது மகளுடன் ரோஜா எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்கள் முதல் முறையாக வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











