ரோஜா தொடர் நாயகனின் அடுத்த சீரியல்.. இந்த முறை சன் டிவியில் இல்லையா?

சென்னை : ரோஜா சீரியலில் அர்ஜுன் கேரக்டரில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் சிபு சூர்யன்.

தற்போது இவர் நடித்துள்ள ரோஜா சீரியலுக்கு எண்ட் கார்ட் போடப்பட்டுள்ள நிலையில், விரைவில் இவர் அடுத்த சீரியலில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக படங்களில் நடிப்பதற்காக ரோஜா சீரியலில் இருந்தே இவர் விலகவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், படங்களிலும் இவர் கவனம் செலுத்தவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

நடிகர் சிபு சூர்யன்

நடிகர் சிபு சூர்யன்

நடிகர் சிபு சூர்யன் மற்றும் பிரியங்கா நல்கார், வடிவுக்கரசி, சிவா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 4 ஆண்டுகளாக சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்த சீரியல் ரோஜா. இந்தத் தொடர் 1000 எபிசோட்களை கடந்த நிலையில் தற்போது இந்த சீரியலுக்கு எண்ட் கார்ட் போடப்பட்டுள்ளது. சமீபத்தில் இதுகுறித்து உருக்கமாக பதிவிட்டிருந்தார் சிபு. இந்தத் தொடரில் சிபு மற்றும் பிரியங்காவின் ரொமான்ஸ் மற்றும் கெமிஸ்ட்ரி மிகவும் பிரசித்தம்.

சிறப்பான கேரக்டர்கள்

சிறப்பான கேரக்டர்கள்

அர்ஜுன் சார் என்று ரோஜா கேரக்டரில் நடித்திருந்த பிரியங்காவின் கொஞ்சல் மொழி, அவரை தாங்கும் அர்ஜுன், அவருடைய மாமியார், அழகான வில்லி என இந்தத் தொடரில் கேரக்டர்கள் அனைத்தும் ரசிகர்களை கட்டிப் போட்டன. காணாமல் போய் திரும்ப கிடைக்கும் ரோஜாவின் அம்மாவாக நடித்திருந்த டாக்டர் ஷர்மிளாவும் இந்த சீரியலுக்கு அழுத்தம் கொடுத்திருந்தார்.

ரோஜா -அர்ஜுனின் ரொமான்ஸ்

ரோஜா -அர்ஜுனின் ரொமான்ஸ்

சீரியலில் வில்லியின் வில்லத்தனத்தை சிறப்பாக கையாளும் அர்ஜுன், அவரது ஒவ்வொரு செயலுக்கும் கைக்கொடுக்கும் அழகான மனைவியாக ரோஜா என இந்தத் தொடரின் ஒவ்வொரு எபிசோடும் ரசிகர்களை கவர்ந்தது. அழகான சினிமா பாடல்களுடன் இவர்கள் இருவரின் ரொமான்சும், நாமும் நிஜ வாழ்வில் இப்படித்தான் செய்ய வேண்டுமோ என்ற நினைப்பை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியது.

அதிரடி காட்சிகள்

அதிரடி காட்சிகள்

சீரியலில் அதிரடிக்கும் பஞ்சமில்லாமல் இருந்தது. குறிப்பாக சிபு சூர்யன் அழகான ஹீரோவாக மட்டுமில்லாமல் ஆக்ஷனிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். சினிமாவை போன்றே இந்த சீரியலிலும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இருந்தது. வக்கீலாக இந்த சீரியலில் சிபு நடித்திருந்த நிலையில், ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்தது.

ரோஜா சீரியல் நிறைவு

ரோஜா சீரியல் நிறைவு

இதனிடையே இந்த சீரியலுக்கு எண்ட் கார்ட் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து சமீபத்தில் தெரிவித்த சிபு சூரியன், தன்னுடைய வருத்தத்தையும் பதிவு செய்தார். முன்னதாகவே இந்த சீரியலில் இருந்து அவர் விலகவுள்ளதாகவும் சினிமாவில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், ரோஜா சீரியலுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து அவர் அந்த முடிவை கைவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஜீ தமிழுக்காக புதிய தொடரில் சிபு

ஜீ தமிழுக்காக புதிய தொடரில் சிபு

இதனிடையே தற்போது ரோஜா சீரியல் நிறைவுறவுள்ள நிலையில், விரைவில் அவர் அடுத்த சீரியலில் நாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த முறை அவர் சன் டிவி சீரியலில் நடிக்காமல் ஜீ தமிழில் நடிக்கவுள்ளதாகவும் தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இந்த சீரியல் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X