விஜய் இதை எப்படி செஞ்சார்னு.. சத்தியமா புரியல.. நடிகை ரோஜா ஷாக்!
சென்னை: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள், தவெக தொண்டர்கள் கலந்துகொண்டனர். மாநாடு போல திரண்டு வந்திருந்த கூட்டத்தை பார்த்து ஒட்டுமொத்த அரசியல் தலைவர்களையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. இதுகுறித்து பேசி உள்ள நடிகை ரோஜா, விஜய் கூட்டத்தை பார்த்து உண்மையில் நான் அதிர்ச்சி அடைந்தேன் என்று கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை பெருந்துறை அருகே சுங்கச்சாவடி சரளையில் உள்ள விஜயபுரி அம்மன் கோவில் திடலில் நடைபெற்றது. அதற்கான ஏற்பாடுகளை த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்துடன் இணைந்து செங்கோட்டையன் மற்றும் நிர்வாகிகள் மேற்கொண்டனர். அனைத்து பகுதிகளிலும் இரும்புக் கம்பிகளால் ஆன தடுப்பு வேலிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு தடுப்பு வேலி பகுதியிலும் சுமார் 400 முதல் 500 பேர் வரை நிற்கும் வகையில் இடவசதி செய்யப்பட்டு இருந்தது.

தமிழக வெற்றி கழகம்: கரூர் சம்பவத்துக்குப் பிறகு தமிழகத்தில் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் என்பதாலும், செங்கோட்டையன் இணைந்த பிறகு முதன்முறையாக நடைபெறும் கூட்டம் என்பதால், இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இதில் பேசிய விஜய், ஈரோடு மாவட்டத்தின் பெருமைகளை பேசினார். மேலும், திமுக ஒரு தீய சக்தி என முழக்கமிட்டார். இந்த கூட்டத்தில் கட்டுக்கடங்காத மக்கள் கலந்து கொண்டனர்.
சத்தியமா புரியல: இதுகுறித்து பேசிய நடிகையும், ஆந்திர முன்னாள் அமைச்சருமான ரோஜா, விஜய்யின் ஈரோடு மீட்டிங்கை பார்க்கும்போது உண்மையாகவே எனக்கு ரொம்ப ஷாக் ஆகத்தான் இருந்தது. நாங்க கவர்மெண்ட்ல முதலமைச்சருக்கு ஒரு மாநாட்டில் மீட்டிங் நடத்த வேண்டும் என்றால், அதற்கு பல பேர் விடிய விடிய வேலை செய்ய வேண்டும் என்பது எனக்கு நல்லாவே தெரியும். அந்த மீட்டிங்கை நடித்த, மினிஸ்டர், எம்எல்ஏ, எம்பி, எஸ்பி, கலெக்டர் என அனைவரும் ஒன்றாக சேர்த்து வேலை செய்ய வேண்டும். அதுமட்டுமில்லாமல் அந்த மீட்டிங் நல்லபடியாக நடக்க வேண்டும் என்றால், அனைவரும் ஒத்துருழைத்தால் தான் பெரிய மீட்டிங் நடத்த முடியும். ஆனால், தமிழக வெற்றிக்கழகத்தில் ஆட்கள் இல்லை, பெரிய ஆளு இல்லாத போதும். இவ்வளவு பெரிய மீட்டிங்கை விஜய் எப்படி செஞ்சாருன்னு சத்தியமா எனக்கு புரியவே இல்ல. மக்கள் விஜய்யிடம் ஒரு விஷயத்தை எதிர்பார்க்கிறார்கள். விஜய் சார் அதை தெரிந்து கொண்டு மக்களுக்கு, அதை கொடுக்கும் போது தான் மக்கள் ஆதரவு விஜய்க்கு கண்டிப்பா இருக்கும் என்று நடிகை ரோஜா பேசி உள்ளார்,.


Click it and Unblock the Notifications











