Japan: ஜப்பான் ஆடியோ லான்ச்சில் ஒலித்த ரோலக்ஸ் சத்தம்.. உள்ளே வந்தது யாருன்னு பாருங்க!

சென்னை: நேரு ஸ்டேடியத்தில் நடிகர் விஜய்யின் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என எதிர்பார்த்த நிலையில், கடைசியில் அதிக கூட்டம் வரும் என்பதால் உரிய அனுமதி கிடைக்காத நிலையில், ஆடியோ வெளியீட்டு விழாவே ரத்து செய்யப்பட்டது.

எந்தவொரு பெரிய புரமோஷனும் இல்லாமல் வெளியான லியோ திரைப்படம் இதுவரை 500 கோடி வசூலை ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Rolex Sound is top notch when Lokesh Kanagaraj enters into Japan Audio launch

இந்நிலையில், நேரு ஸ்டேடியத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஜப்பான் இசை வெளியீட்டு விழாவில் லியோ மற்றும் ரோலக்ஸ் சத்தம் தான் விண்ணை பிளந்துள்ளன. அதற்கு காரணம் அந்த பிரபலம் தான்.

ஜப்பான் ஆடியோ லான்ச்: இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி, அனு இம்மானுவேல், சுனில், கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள ஜப்பான் படம் வரும் தீபாவளி ரிலீஸாக வெளியாகிறது. இந்நிலையில், அந்த படத்தை புரமோட் செய்ய எஸ்.ஆர். பிரபு அனைத்து வேலைகளையும் பக்காவாக செய்துள்ளார். நேரு ஸ்டேடியத்தில் திரை பிரபலங்கள் சூழ பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

ரோலக்ஸ் சத்தம்: நேரு ஸ்டேடியத்தில் வாரிசு இசை வெளியீட்டு விழா, ரஜினிகாந்தின் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாக்கள் நடைபெற்ற நிலையில், அடுத்து லியோ வெளியீட்டு விழா நடைபெறும் என காத்திருந்த தளபதி ரசிகர்களுக்கு கடைசி நேரத்தில் ஆடியோ வெளியீட்டு விழாவே ரத்து என்கிற செய்தி இடியாக இறங்கியது. இந்நிலையில், இன்று நடைபெற்ற ஜப்பான் ஆடியோ வெளியீட்டு விழாவில் லோகேஷ் கனகராஜ் என்ட்ரியின் போது லியோ லியோ லியோ என ரசிகர்கள் சத்தம் காதை கிழித்தது. அதன் பின்னர் ரோலக்ஸ், ரோலக்ஸ் என சூர்யா ரசிகர்கள் கத்த ஆரம்பித்தனர்.

Rolex Sound is top notch when Lokesh Kanagaraj enters into Japan Audio launch

கார்த்தி மற்றும் சூர்யா: லோகேஷ் கனகராஜ் அரங்கிற்குள் நுழையும் போது கார்த்தி மற்றும் சூர்யா இருவரது என்ட்ரிக்கும் வராத அளவுக்கு மிகப்பெரிய சத்தம் எழுந்ததாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

நவம்பர் 1: வரும் நவம்பர் 1ம் தேதி லியோ படத்தின் வெற்றி விழா இதே நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், அதுமட்டும் நடந்தால், இன்னும் சவுண்ட் எப்படி இருக்கப் போகுதுன்னு பாருங்க என விஜய் ரசிகர்கள் அலப்பறையை கிளப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X