Rolex: ரோலக்ஸ் வெர்ஷனுக்கு மாறும் கைதி 2... சூர்யா, கார்த்தி காம்போவில் மிரட்டப் போகும் LCU!

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான விக்ரம் திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

இதில், கேமியோ ரோலில் நடித்த சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்த கேரக்டரை மட்டும் தனிப் படமாக எடுக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளாராம்.

இதுகுறித்து செய்திகள் வெளியான நிலையில், தற்போது இன்னொரு மாஸ் அப்டேட்டும் கிடைத்துள்ளது.

 Rolex: Suriya and Karthi team up Rolex film instead of Kaithi 2 for LCU

ரோலக்ஸ் வெர்ஷனுக்கு மாறும் கைதி 2: மாநகரம் படம் மூலம் கவனம் ஈர்த்த லோகேஷ் கனகராஜ், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்கள் மூலம் புகழின் உச்சத்திற்கே சென்றுவிட்டார். அவர் இயக்கிய நான்கு படங்களுமே விமர்சன ரீதியாகவும், வசூல் அளவிலும் மாஸ் காட்டின. குறிப்பாக கடந்தாண்டு வெளியான விக்ரம் திரைப்படம் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது. பாக்ஸ் ஆபிஸிலும் 600 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தது.

உலகநாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் விக்ரம் படத்தில் நடித்திருந்தனர். ஆனால், க்ளைமேக்ஸ் காட்சியில் 5 நிமிடங்கள் மட்டுமே வந்த சூர்யா ரசிகர்களுக்கே சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார். ரோலக்ஸ் என்ற கேரக்டரில் நடித்திருந்த சூர்யா, அதன்பின்னர் ரசிகர்களின் வைப்-இல் ரோலக்ஸாகவே வலம் வந்துகொண்டிருக்கிறார்.

விக்ரம் வெளியாகி ஒராண்டு கடந்த பின்னரும் ரோலக்ஸ் கேரக்டர் அடிக்கடி டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும், லோகேஷ் செல்லுமிடமெல்லாம் ரோலக்ஸ் கேரக்டர் லியோ படத்தில் எதிர்பார்க்கலாமா எனவும் கேட்டு வருகின்றனர். இதற்கெல்லாம் முடிவு எடுக்கும்விதமாக சூர்யாவை சந்தித்து 'ரோலக்ஸ்' கேரக்டரை தனிப் படமாக இயக்கலாம் என லோகேஷ் கூறியுள்ளார். அதற்கு சூர்யாவும் ஓக்கே சொல்லிவிட்டதாக தெரிகிறது.

லியோ போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில் பிஸியாக இருக்கும் லோகேஷ், அடுத்து ரஜினியின் தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளாராம். அதன்பின்னர் கார்த்தி நடிப்பில் கைதி 2ம் பாகத்தை இயக்கவிருக்கிறார். ஆனால், தற்போது அதற்கு பதிலாக ரோலக்ஸ் படத்தை இயக்க முடிவெடுத்துள்ளாராம் லோகேஷ். கைதி 2 ஸ்க்ரிப்ட்டை அப்படியே மாற்றி அதனை ரோலக்ஸ் என்ற பெயரில் இயக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.

மேலும் இதில் சூர்யா - கார்த்தி இருவரும் லீடிங் கேரக்டரில் நடிக்கவிருப்பதும் உறுதியாகியுள்ளது. அதாவது சூர்யாவின் ரோலக்ஸ் VS கார்த்தியின் டில்லி கேரக்டர்கள் இடையேயான போர்ஷன் முழுவதும் இந்தப் படத்தில் இருக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இந்த ப்ராஜெக்ட் குறித்த அபிஸியல் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. அதேநேரம் விஜய்யின் லியோ படத்தில் சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டரின் வாய்ஸ் ஓவர் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X