ரோலக்ஸ் VS லியோ.. FLAMES போட்டுப்பார்த்த ரசிகர்கள்.. இவங்க அட்டகாசம் தாங்கமுடியலப்பா!
சென்னை : விஜய்யின் லியோ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், நெட்டிசன்கள், ரோலக்ஸ் VS லியோ என இருவருக்கும் FLAMES போட்டுப்பார்த்து அலப்பறை கொடுத்துள்ளனர்.
விஜய் நடித்த வாரிசு படம் தமிழ், தெலுங்கு மொழியில் வெளியானது, இந்தப்படத்தை வம்சி பைடிபள்ளி இயக்கியிருந்தார்.
இந்தப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, ஷியாம், ஜெயசுதா, சங்கீதா, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கூட்டுக்குடும்ப கதைக்களத்தை கொண்ட இப்படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்தது.

வாரிசு
வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் கொட்டும் பனியில் நடந்து வருகிறது. படப்பிடிப்பில் கலந்து கொண்ட பிரபலங்கள், அவ்வப்போது காஷ்மீரில் இருந்தப்படி போட்டோக்களை வெளியிடும் சோஷியல் மீடியாவை கலக்கி வருகின்றனர்.

முன்னணி நடிகர்கள்
இப்படத்தில் 14 வருடங்களுக்கு பிறகு திரிஷா , விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவர்களுடன் பிரபல இயக்குனர்கள் மிஷ்கின், கெளதம் மேனன், நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் இந்தப்படத்தில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தினை செவன் ஸ்கீரின் ஸ்டுடியோ தயாரித்து வருகிறது.

அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
விக்ரம்' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு லோகேஷ் இயக்கும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் எகிறி உள்ளது. லியோ' படம் முழுமுழுக்க தன்னுடைய பாணியில் இருக்கும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளதால், இந்த படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

Bloody Sweet
விக்ரம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஐந்து நிமிடத்தில் வந்து மொத்தமாக ஸ்கோர் செய்துவிட்டு என்ற சூர்யா, ரசிகர்கள் ரோலக்ஸ் ரோலக்ஸ் என்று கொண்டாடி வருகின்றனர். அதே போல, லியோ படத்தின் டைட்டில் ப்ரோமோவில்,விஜய் சாக்லெட்டை சுவைத்தபடி Bloody Sweet கூறியது டிரெண்டானது.

ரோலக்ஸ் VS லியோ
இந்நிலையில், நெட்டிசன்கள் ரோலக்ஸ் VS லியோ என பதிவிட்டு .. FLAMES போட்டுப்பார்த்துள்ளனர். இதில் கடைசியாக 'E' மட்டும் இருந்ததால், இருவரும் Enemy என குறிப்பிட்டுள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் டிரெண்டானதை அடுத்து, ரசிகர்கள் பலர் இவங்க அட்டகாசம் தாங்கமுடியலப்பா என கருத்துக்கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications