என் கணவருக்கு ரொமான்ஸ் சுத்தமா வராது.. அவர் ரொமான்ஸ் பண்ணா சிரிப்புதான் வரும்!
சென்னை : இயக்குனராக பல வெற்றிப்படங்களை கொடுத்த சுந்தர் சி இப்பொழுது ஹீரோவாகவும் பல படங்களில் பட்டையை கிளப்பிக் கொண்டு உள்ளார்
தலைநகரம் இரண்டாவது பாகத்தில் இப்பொழுது ஹீரோவாக நடித்து வருகிறார்
இந்த நிலையில் நடிகை குஷ்பு கணவர் சுந்தர் சிக்கு ரொமான்ஸ் சுத்தமா வராது அவர் ரொமான்ஸ் பண்ணா சிரிப்பு தான் வரும் என கலகலப்பாக பேசி உள்ளார்.

ஹீரோவாக அவதாரம்
மாமன் மகள், முறை மாமன் , உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, கிரி, வின்னர்,உன்னைத் தேடி, உனக்காக எல்லாம் உனக்காக, கலகலப்பு 2 , அரண்மனை என பல சூப்பர் ஹிட் வெற்றிப் படங்களை கொடுத்த சுந்தர் சி இப்பொழுது கதாநாயகனாகவும் தமிழ் சினிமாவில் வளர்ந்து கொண்டுள்ளார். தலைநகரம் என்ற படத்தில் ஹீரோவாக அவதாரம் எடுத்த சுந்தர் சி நடிப்பில் வெளியான படங்களும் வெற்றி பெற்று வருகிறது.

தலைநகரம் பாகம் 2
இப்போது தலைநகரம் பாகம் 2ல் ஹீரோவாக நடித்து வருகிறார். இயக்குனர் வி இசட் துரை இந்த படத்தை இயக்கி வர படப்பிடிப்பு பூஜையுடன் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டுள்ளது. கலகலப்பு-2 தொடர்ந்து ஜீவா மற்றும் ஜெய் இணைந்து நடிக்கும் புதிய படத்தையும் சுந்தர் சி இயக்கி வருகிறார்.

22 ஆண்டுகளாக நட்சத்திர கப்புலாக
90களின் கனவு கன்னியாக இருந்த குஷ்புவை 2000 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் சுந்தர் சி . கடந்த 22 ஆண்டுகளாக இருவரும் நட்சத்திர கப்புலாக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் இருவரும் இணைந்து படங்களையும் தயாரித்து வருகின்றனர். அவ்னி மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து வரும் சுந்தர் சி மற்றும் குஷ்பு சமீபகாலமாக எந்த ஒரு படத்திலும் இணைந்து நடிக்கவில்லை .

அண்ணாத்த
நடிகை குஷ்பு கடைசியாக ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணாத்த படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் குஷ்பு சமீபத்தில் அளித்த நேர்காணல் சுந்தர் சி குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

ரொமான்ஸில் சுந்தர் சி படு வீக்
இதில் அவர் பேசியதாவது குஷ்புவுக்கு ரொமான்ஸ் செய்வது ரொம்பவே பிடிக்குமாம். ஆனால் அவரது கணவர் சுந்தர் சி இதற்கு அப்படியே ஆப்போசிட் ரொமான்ஸ் என்றால் என்னவென்றே தெரியாதாம். ரொமான்ஸ் என்ற வார்த்தையில் முதல் எழுத்து கூட என்னவென்று தெரியாதாம் அந்த அளவிற்கு ரொமான்ஸில் சுந்தர் சி படு வீக்கானவராம் . அப்படியும் மீறி சுந்தர் சி ரொமான்ஸ் செய்தால் தனக்கு சிரிப்புதான் வரும் இவ்வாறு தனது கணவர் சுந்தர் சி குறித்து குஷ்பு செம ஜாலியாக பேசிய நேர்காணல் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











