சோமசேகரை புரபோஸ் பண்ண வைத்த ஐஸ்வர்யா.. என்னங்கடா நடக்குது இங்க.. பாவம் ரம்யா பாண்டியன்!

சென்னை: ஆரி கூட நடிச்சிட்டு, சோமசேகருடன் அடுத்த படத்தில் நடிக்க நல்லாவே ஐஸ்வர்யா தத்தா ரூட் போட்டுவிட்டார்.

ரொமான்டிக் பாய் என ஐஸ்வர்யா தத்தா சோமசேகரிடம் குழைந்து குழைந்து பேசியதை பார்த்து, ஒரு பக்கம் பாலாவுக்கும் மறுபக்கம் ரம்யாவுக்கும் வயிறு எரிந்து இருக்கும்.

கடைசியில், சோமசேகரை புரபோஸே பண்ண சொல்லி அட்டகாசம் செய்து விட்டார் ஐஸ்வர்யா தத்தா.

பிக் பாஸ் வீட்டின் சர்வாதிகாரி

பிக் பாஸ் வீட்டின் சர்வாதிகாரி

பிக் பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ஐஸ்வர்யா தத்தா. தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம், பாயும் புலி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் வீட்டில், யாஷிகாவும் அவரும் சேர்ந்து செய்த அட்டகாசங்கள் மறக்க முடியாதவை. மேலும், சர்வாதிகாரி டாஸ்க்கில் தாடி பாலாஜி மீது குப்பை அள்ளி கொட்டியது பெரும் பரபரப்பை கிளப்பியது.

ஆரிக்கு ஹீரோயின்

ஆரிக்கு ஹீரோயின்

கடந்த சீசன் பிக் பாஸ் போட்டியாளரான லாஸ்லியா மற்றும் இரண்டாவது சீசன் போட்டியாளரான ஐஸ்வர்யா தத்தாவுடன் இணைந்து பிக் பாஸ் தமிழ் 4வது சீசன் போட்டியாளரான ஆரி நடித்து வருகிறார். லாக்டவுன் காரணமாக அந்த படம் ஷூட்டிங் முடிந்த நிலையில் இருக்கிறது. சீக்கிரமே போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் முடிந்து ரிலீசாகும் என ஆரி, ஐஸ்வர்யாவுக்கு ஆறுதல் அளித்தார்.

சோமை பார்த்து ஜொள்ளு

சோமை பார்த்து ஜொள்ளு

ஐஸ்வர்யா தத்தா குழைந்து குழைந்து பேசியதை பார்த்து பிக் பாஸ் ரசிகர்கள் ரொம்பவே கடுப்பாகி விட்டனர். அதிலும், சோமசேகரை பார்த்து, ரொமான்டிக் பாய் என ஜொள்ளு விட்டதை பார்த்த ரியோ ராஜ், நமக்குத் தெரியாம பல விஷயங்களை பண்றான் போல என வெளிப்படையாக பேசிவிட்டார். ஆனால், அதையே பாலா உள்ளுக்குள் நினைத்து இவனை எப்படி வெளியே அனுப்பலாம் என பிளான் போட்டுக் கொண்டிருப்பார்.

புரபோஸ் பண்ணுங்க சோம்

புரபோஸ் பண்ணுங்க சோம்

ரொமான்டிக் பாய் என சோமசேகரை சொன்னது மட்டுமின்றி, என்னை புரபோஸ் பண்ணுங்க என டாஸ்க் கொடுக்க வந்த இடத்திலும், லவ் டிராக் போட்டு தனி டிராக்கில் ஐஸ்வர்யா தத்தா சென்று கொண்டு இருந்தார். சோமசேகர் உடனே எழுந்து வந்து, தனது இதயத்தை எடுத்து, டேக் இட்டு என கொடுத்து அழகா புரபோஸ் பண்ணார்.

பாவம் ரம்யா

பாவம் ரம்யா

இப்போ தான் இந்த பிக் பாஸ் வீட்டில், ரம்யா பாண்டியனுக்கும் சோமசேகருக்கும் பிக் பாஸ் கனெக்‌ஷன் கொடுக்க பார்க்கிறார். அதற்குள் ஐஸ்வர்யா தத்தா இப்படி பண்ணா எப்படி என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். மேலும், மற்றொரு பக்கம், திருமணமாகி குழந்தை இருக்கும் சம்யுக்தாவுடன் சோமசேகரை கேவலமாக சுசித்ரா கோர்த்து விட்டதையும் ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X