ப்பா.. என்னா போஸ்டர்டா சாமி.. மே மாசம் வெயிலுக்கு சும்மா ஜிவ்வுன்னு இருக்கப் போகுது 'ரொமான்ட்டிக்'!

சென்னை: ரொமான்ட்டிக் படத்தின் லிப்லாக் சீன் இடம்பெற்றுள்ள போஸ்டர் வைரலாகி வருகிறது.

தெலுங்கு திரைப்பட இயக்குநர்களில் முக்கியமானவர் புரி ஜெகன்னாத். இயக்குநர் மட்டுமின்றி எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து வருகிறார்.

2000ஆம் ஆண்டு பவன் கல்யாணை வைத்து பத்ரி என்ற படத்தை இயக்கியதன் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார் புரி ஜெகன்னாத். தெலுங்கு திரைத்துறையின் துணிச்சலான இயக்குநர் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார்.

இரண்டு குழந்தைகள்

இரண்டு குழந்தைகள்

2006ஆம் ஆண்டு அவர் போக்கிரி படத்தை இயக்கினார் இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. அதற்கு முன்னதாக 2004 ஆம் ஆண்டு பாலிவுட் படத்தை இயக்கி இந்தி திரையுலகிலும் அறிமுகமானார் புரி ஜெகன்னாத். இவருக்கு ஆகாஷ் ஜெகன்னாத் என்ற மகனும் பவித்ரா ஜெகன்னாத் என்ற மகளும் உள்ளனர்.

கேட்டிகா ஷர்மா

கேட்டிகா ஷர்மா

புரி ஜெகன்னாத்தின் மகனான ஆகாஷ் ஜெகன்னாத் ரொமான்டிக் என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்த படத்தை ஆகாஷின் தந்தையான புரி ஜெகன்னாத்துதான் தயாரிக்கிறார். இதில் ஆகாஷ் ஜெகன்னாத்துக்கு ஜோடியாக கேட்டிகா ஷர்மா நடித்துள்ளார்.

உதட்டில் முத்தம்

உதட்டில் முத்தம்

இந்தப் படத்தை அனில் பதுரி இயக்கியுள்ளார். ரொமான்ட்டிக் படத்திற்கு சுனில் காஷ்யப் இசையமைத்திருக்கிறார். நரேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி படு ஸ்டைலாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பஸ்ஸின் படியில் நிற்கும் ஹீரோயினுக்கு ஹீரோ உதட்டில் முத்தம் கொடுப்பதாக உள்ளது அந்த போஸ்டர்.

உணர தயாராகுங்கள்

வரும் மே மாதம் 29 ஆம் தேதி படம் ரிலீஸாக உள்ளது. இந்த அறிவிப்பை படத்தின் தயாரிப்பாளரான புரி ஜெகன்னாத் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். மேலும் கோடை, கடற்கரை & காதல் இணைக்கப்பட்டுள்ளது. மே 29,2020 அன்று ரொமாண்டிக், உலகளவில் ரிலீஸ் ஆகிறது. இந்த கோடையில் வெப்பத்தை உணர தயாராகுங்கள் என பதிவிட்டுள்ளார்.

படம் எப்படி இருக்கும்?

படம் எப்படி இருக்கும்?

அவரது இந்த டிவிட்டின் மூலம் படத்தில் ரொமான்டிக் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என தெரிகிறது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. படத்தின் போஸ்டரை பார்த்தவர்கள் போஸ்டரே இப்படி என்றால் படம் எப்படி இருக்கும் என தெரிவித்து வருகின்றனர்.

விடமாட்டார் போல

விடமாட்டார் போல

மேலும் மகனின் படத்தை புரி ஜெகன்னாத் பிளாக் பஸ்டர் ஹிட்டாக்காமல் விடமாட்டார் போல என்றும் தெலுங்கு சினிமா வட்டாரத்தினர் பேசி வருகின்றனர். புரி ஜெகன்னாத் இயக்கத்தில் ஐஸ்மார்ட் ஷங்கர் என்ற படம் கடைசியாக வெளியானது. பிளாக் பஸ்டர் ஹிட்டான அந்தப் படத்தை தொடர்ந்து மகனை வைத்து ரொமான்டிக் படத்தை தயாரிக்கிறார் புரி ஜெகன்னாத்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X