ரொம்ப நல்லவன்டா நீ... கதாநாயகியை வம்புக்கு இழுக்கும் மிர்ச்சி செந்தில்

By Mayura Akilan

உன்னை ரொம்ப நல்லவன்னு சொன்னாங்க... இது வடிவேலுவின் காமெடி டயலாக். நண்பர்களிடையே அடிக்கடி இந்த வார்த்தையை உச்சரிப்பார்கள். அப்படி அடிக்கடி பேச்சு வழக்கில் உள்ள 'ரொம்ப நல்லவன்டா நீ' என்கிற வார்த்தையை படத்திற்கு தலைப்பாக வைத்துவிட்டார் ஏ.வெங்கடேஷ்.

ஆக்சன் படங்களை இயக்குவதில் வல்லவரான இயக்குனர் A. வெங்கடேஷ்... ராண்டேவோ மூவி மேக்கர்ஸ் சார்பில் தீபக் குமார் நாயர் தயாரிக்கும் ‘ரொம்ப நல்லவன்டா நீ' என்ற படத்தை இயக்கி வருகிறார். காமெடி திரில்லராக தயாராகி வரும் இப்படத்தில் நாயகனாக மிர்ச்சி செந்தில், கதாநாயகியாக சுருதி பாலா நடிக்கிறார்கள்.

கேரளத்து வரவு

கேரளத்து வரவு

கேரளத்து வரவாக வரும் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் ஒரு இடம் உண்டு. அந்த வரிசையில் தற்போது கேரளத்திலிருந்து வந்துள்ள ஸ்ருதிபாலா. ‘ரொம்ப நல்லவன்டா நீ' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

பாக்யராஜ் காமெடி

பாக்யராஜ் காமெடி

எனக்கு பாக்யராஜ் ஸ்டைல் காமெடி பிடிக்கும். அவர் படங்களில் அவர் அப்பாவியாக இருப்பார். அவர் செய்யும் காரியங்கள் சிரிப்பாகவும் சீரியசாகவும் இருக்கும். அதே மாதிரிதான் இதன் கதையும் என்கிறார் இயக்குநர் ஏ.வெங்கடேஷ்.

புது அனுபவம்

புது அனுபவம்

"என் படங்களில் நகைச்சுவைக்கு முக்கிய இடம் உண்டு. எனினும் முழு நீள காமெடி படத்தை நான் இயக்கியதில்லை. இது எனக்கு முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது.

ஏழு நாட்கள் நட்பு

ஏழு நாட்கள் நட்பு

முன்பின் அறியாத இரண்டு நபர்களின் ஏழு நாட்கள் நட்பு, அதன் தொடர்ச்சியாக ஏற்படும் சுவாரசியமான சம்பவங்களின் அடிப்படையில் அமைந்ததே ‘ரொம்ப நல்லவன்டா நீ'.

முழுநீள நகைச்சுவை

முழுநீள நகைச்சுவை

எனது இயக்கத்தில் வெளி வந்த பெரும்பாலான படங்கள் வணிக ரீதியாக வெற்றிப் படங்களே. சமீபத்திய டிரென்டான நகைச்சுவை இந்த படம் முழுவதிலும் நிறைந்த்திருக்கும்" என்கிறார் இயக்குநர் A.வெங்கடேஷ்.

நடிகை ரேகா

நடிகை ரேகா

நீண்ட நாட்களுக்கு பிறகு கடலோர கவிதைகள் ரேகா இதில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.மனோகர் ஒளிப்பதிவில், ராம் சுரேந்தர் இசை அமைப்பில், கனல் கண்ணனின் சண்டை பயிற்சியில், விஜய் படத் தொகுப்பில் இந்த படம் குறுகிய காலத்தில் வேகமாக படமாக்கப்பட்டது. ரீரெக்கார்டிங் நடந்து வருகிறது. விரைவில் ரிலீசாக உள்ளதாகவும் கூறினார் இயக்குநர்.

வில்லனாக சர்வஜித்

வில்லனாக சர்வஜித்

முக்கியமான கதாபாத்திரத்தில் ரோபோ சங்கர் நடிக்க வில்லனாக எத்தன் புகழ் ‘ சர்வஜித்' நடிக்கிறார். பல வெற்றி படங்களை இயக்கியதோடு, ‘அங்காடி தெரு' படத்தில் வில்லனாக நடித்து மிரட்டிய இயக்குநர் வெங்கடேஷ், இப்படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

செந்திலின் காமெடி

செந்திலின் காமெடி

சரவணன் மீனாட்சியில் நடித்த மிர்ச்சி செந்தில் இதுவரை பல படங்களில் நடித்துள்ளார். ரொம்ப நல்லவன்டா நீ படம் பேசப்படக்கூடிய படமாக அமையும் என்கின்றனர். காமெடி கைகொடுக்குமா பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X